இந்தியா

நீதிமன்ற வளாகத்திற்குள் நுழைந்த யானை: அச்சத்தில் உறைந்த அதிகாரிகள்

Published On 2023-12-28 06:31 GMT   |   Update On 2023-12-28 06:32 GMT
  • கேட்டை தள்ளியவாறு உள்ளே வந்ததால் அதிகாரிகள் அதிர்ச்சியில் உறைந்தனர்.
  • வனத்துறையினர் விரைந்து வந்து புலிகள் காப்பத்திற்கு திரும்பி செல்ல முயற்சி மேற்கொண்டனர்.

உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரில் உள்ள ரோஷனாபாத்தில் மாவட்ட மற்றும் செசன்ஸ் நீதிமன்றம் உள்ளது. இந்த நீதிமன்றம் முக்கிய சாலைப் பகுதியில் அமைந்துள்ளது. நேற்று திடீரென இந்த சாலையில் பெரிய தந்தங்களை கொண்ட யானை ஒன்று ஒய்யாரமாக நடந்து சென்றது.

நீதிமன்ற வளாக கேட்டை கடந்த சென்ற யானை திடீரென என்ன நினைத்ததோ தெரியவில்லை. சட்டென்று திரும்பி கேட்டை தள்ளிக்கொண்டு உள்ளே வந்தது. அருகில் உள்ள சுவரையும் இடித்துத் தள்ளியது.

இதனால் நீதிமன்ற வளாகத்தில் இருந்து அதிகாரிகள் செய்வதறியாமல் அச்சத்தில் உறைந்தனர். ஆனால் உள்ள வந்த யானை உடனடியாக வந்த வழியாக திரும்பி சென்றது. இதனால் அதிகாரிகள் நம்மதி பெருமூச்சு விட்டனர்.

இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. நீதிமன்றம் அமைந்துள்ள பகுதிக்கு அருகில் புலிகள் காப்பகம் உள்ளது. அங்கிருந்து யானை வெளியில் வந்திருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

உடடினடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, துப்பாக்கி சுட்டு யானையை புலிகள் காப்பகத்திற்குள் செல்ல முயற்சி மேற்கொண்டனர் என நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

Similar News