இந்தியா

வாகன வசதி இல்லை.. மகன்கள் உடலை 15 கி.மீ. தோளில் தூக்கிச் சென்ற பெற்றோர்

Published On 2024-09-05 10:57 GMT   |   Update On 2024-09-05 10:57 GMT
  • பெற்றோர் தங்களது இரு மகன்களை பரிக்கொடுத்தனர்.
  • ஒரு மணி நேரத்தில் இருவரின் உயிரும் பிரிந்ததாக கூறப்படுகிறது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் உயிரிழந்த மகன்களின் சடலத்தை பெற்றோர் தங்களது தோள் மீது தூக்கிக் கொண்டு செல்ல வற்புறுத்தப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மகன்களை உரிய நேரத்திற்கு மருத்துவமனை அழைத்து செல்ல முடியாததால், பெற்றோர் தங்களது இரு மகன்களை பரிக்கொடுத்துள்ளனர்.

மராட்டிய மாநிலத்தின் கட்சிரோலியை அடுத்த அஹெரி தாலுகாவை சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது. சரியான நேரத்தில் சிகிச்சை கிடைக்காத நிலையில், இருவரின் உடல்நிலை திடீரென மோசமானது. அடுத்த ஒரு மணி நேரத்தில் இருவரின் உயிரும் பிரிந்ததாக கூறப்படுகிறது.

உயிரிழந்த சிறுவர்களை உடலை அவர்களது கிராமத்திற்கு எடுத்துச் செல்ல முறையான ஆம்புலன்ஸ் வசதி கூட செய்து தரப்படவில்லை. இதன் காரணமாக அந்த தம்பதி தங்களது பிள்ளைகளின் சடலத்தை சுமார் 15 கிலோமீட்டர்கள் வரை தோளில் சுமந்த படி நடந்து சென்றுள்ளனர்.

அடையாளம் தெரியாத தம்பதியினர், 10 வயதுக்குட்பட்ட இரண்டு மைனர் சிறுவர்களின் உடல்களை தோளில் சுமந்து கொண்டு, சேறு நிறைந்த காட்டுப் பாதையில் நடந்து செல்லும் வீடியோவை சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் விஜய் வடேட்டிவார் பகிர்ந்துள்ளார்.

Tags:    

Similar News