எம்ஜிஆரை நினைவு கூர்ந்த பவன் கல்யாண் - நெகிழ்ச்சி பதிவு
- புரட்சித் தலைவரின் அன்பர்கள், அபிமானிகள், ரசிகர்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துக்கள்.
- நன்மை, கருணை, நேர்மை, மக்கள் மீது அக்கறை ஆகிய நான்கும் கொண்ட அரசர்களுக்கு அவர் ஒளி.
நடிகரும், ஆந்திரா துணை முதல்வருமான பவன் கல்யாண் எம்.ஜி.ஆர். குறித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
'புரட்சித் தலைவர் எம்ஜிஆர்' மீதான எனது அன்பும் அபிமானமும், சென்னையில் நான் வளர்ந்ததில் ஒரு அங்கம். அது இன்னும் அப்படியே இருக்கிறது. 'அதிமுகவின் 53-வது தொடக்க நாளான அக் 17ஆம் தேதி புரட்சித் தலைவரின் அன்பர்கள், அபிமானிகள், ரசிகர்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துக்கள்.
மயிலாப்பூரில் படிக்கும் போது எனது தமிழ் மொழி ஆசிரியரால்தான் புரட்சித் தலைவரின் முதல் அறிமுகம் கிடைத்தது.
திருக்குறளில் இருந்து ஒரு குறளைப் படித்து, புரட்சித் தலைவரின் குணங்கள் இந்தத் திருக்குறளில் பிரதிபலிக்கின்றன என்றார்.
'கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும்
உடையானாம் வேந்தர்க் கொளி'.
நன்மை, கருணை, நேர்மை, மக்கள் மீது அக்கறை ஆகிய நான்கும் கொண்ட அரசர்களுக்கு அவர் ஒளி.
இவ்வாறு எம்.ஜி.ஆர். குறித்து பவன் கல்யாண் குறிப்பிட்டுள்ளார்.
சில தினங்களுக்கு முன்பு 'சனாதனத்தை அழிக்க நினைப்பவர்கள் அழிந்து போவார்கள்' என்று ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண் கூறியிருந்தார். இதற்கு தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் 'லெட்ஸ் வெயிட் அண்ட் ஸீ' என்று கூறினார். இந்த நிலையில் எம்.ஜி.ஆர் குறித்து பவன் கல்யாண் பதிவிட்டுள்ளது அரசியல் விமர்சகர்களால் கவனிக்கப்படுகிறது.