இந்தியா
தேர்தலுக்குள் எதிர்க்கட்சிகளை ஒழிக்க நினைக்கிறது பா.ஜ.க: மெகபூபா முப்தி சாடல்
- கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதற்கு எதிர்க்கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
- பா.ஜ.க.வில் சேராதவர்கள், சிறைக்குச் செல்வோர் முற்றிலும் நிரபராதிகள் என்றார் மெகபூபா முப்தி.
ஸ்ரீநகர்:
மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறை அதிகாரிகளால் நேற்று இரவு கைது செய்யப்பட்டார்.
கெஜ்ரிவால் கைதைக் கண்டித்து எதிர்க்கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெகபூபா முப்தி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
குற்றவாளிகள் மற்றும் ஊழல்வாதிகள் பா.ஜ.க.வில் சேருகிறார்கள், அதன்பின் அவர்களுக்கு எதிராக எல்லாமே அழிக்கப்படுகிறது.
அரவிந்த் கெஜ்ரிவால், ஹேமந்த் சோரன் மற்றும் பிற எதிர்க்கட்சித் தலைவர்கள் அப்பாவிகள்.
பா.ஜ.க.வில் சேராதவர்கள், சிறைக்குச் செல்வோர் முற்றிலும் நிரபராதிகள்.
தேர்தலுக்கு முன் எதிர்க்கட்சிகளை அழிக்க நினைக்கிறது பா.ஜ.க. என தெரிவித்தார்.