இந்தியா

ஜம்மு காஷ்மீர் மக்கள் குண்டுகளை புறக்கணித்து, வாக்குசீட்டை தேர்வு செய்துள்ளனர்: ஜே.பி. நட்டா

Published On 2024-09-28 02:09 GMT   |   Update On 2024-09-28 02:09 GMT
  • முதல் இரண்டு கட்ட தேர்தல், ஜம்மு காஷ்மீர் மக்கள் அமைதியை விரும்புகிறார்கள் என்பதை காட்டுகிறது.
  • இளைஞர்கள் பயங்கரவாதம் மற்றும் வன்முறையை புறந்தள்ளியுள்னர் என்பதை என்னால் உறுதியாக கூற முடியும்.

ஜம்மு காஷ்மீரில் மூன்று கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி முதற்கட்டமாக 24 தொகுதிகளுக்கும், 2-ம் கட்டமாக 26 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளது.

வருகிற 1-ந்தேதி 3-வது மற்றும் கடைசி கட்ட வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா ஜம்மு காஷ்மீரில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது ஜம்மு காஷ்மீர் மக்கள் குண்டுகளை புறந்தள்ளிவிட்டு வாக்குச்சீட்டுகளை தேர்வு செய்துள்ளனர் என்றார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில் "ஜம்மு காஷ்மீர் மக்கள் குண்டுகளை புறந்தள்ளிவிட்டு வாக்குசீட்டுகள் பாதையை தேர்வு செய்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு இந்த தேர்தல். அவர்கள் தோட்டாக்களுக்கு இதன்மூலம் பதிலடி கொடுத்துள்ளனர்.

முதல் இரண்டு கட்ட தேர்தல்களும் அமைதியாக நடந்து முடிந்துள்ளன. முன்னதாக நடைபெற்ற தேர்தல்கள் போன்று வன்முறை இல்லை. துப்பாக்கிச்சூடு இல்லை. பயங்கரவாத தாக்குதல் இல்லை.

முதல் இரண்டு கட்ட தேர்தல், ஜம்மு காஷ்மீர் மக்கள் அமைதியை விரும்புகிறார்கள் என்பதை காட்டுகிறது. ஸ்திரதன்மை மற்றும் வளர்ச்சியை விரும்புகிறார்கள் என்பதை காட்டுகிறது. இந்தத் தேர்தலை நாங்கள் இப்படித்தான் பார்க்கிறோம்.

ஜம்மு காஷ்மீர் இளைஞர்கள் தேசிய நீரோட்டத்தில் இணைந்துள்ளனர். சட்டப்பிரிவு 370 நீக்கப்படுவதற்கு முன் 300 முதல் 400-க்கும் அதிகமான இளைஞர்கள் பயங்கரவாத அமைப்புகளில் ஆண்டுதோறும் இணைந்து, பின்னர் பயங்கரவாதிகளாக அறிவிக்கப்படுவார்கள். இன்று வெறும் நான்குதான். தரவுகள் அடிப்படையில் அவர்கள் பயங்கரவாதம் மற்றும் வன்முறையை புறந்தள்ளியுள்னர் என்பதை என்னால் உறுதியாக கூற முடியும்.

இவ்வாறு ஜே.பி. நட்டா தெரிவித்தார்.

Tags:    

Similar News