இந்தியா
null
ஆந்திராவில் அதிசய காளான்- பூஜை செய்து வழிபட்ட பொதுமக்கள்
- ஏனைய உயிரினங்களையும் கவர்வதற்காக ஒளி உமிழும் தன்மையை பெற்றிருக்கின்றன.
- ஆந்திர மாநிலம், அல்லூரி சீதாராம ராஜூ மாவட்டம், சம்புண்வரம் பகுதியில் அதிசய காளான் ஒன்று முளைத்து இருந்தது.
திருப்பதி:
உலகில் சுமார் 103 வகையான ஒளி உமிழும் காளான்கள் உள்ளன. இதில் 7 வகைகள் இந்தியாவில் காணப்படுகின்றன.
இந்த வகை காளான்களின் வித்துகள், ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்துக்குப் பரவுவதற்கு உதவும் பூச்சிகளையும், ஏனைய உயிரினங்களையும் கவர்வதற்காக ஒளி உமிழும் தன்மையை பெற்றிருக்கின்றன.
இந்நிலையில் ஆந்திர மாநிலம், அல்லூரி சீதாராம ராஜூ மாவட்டம், சம்புண்வரம் பகுதியில் அதிசய காளான் ஒன்று முளைத்து இருந்தது. அந்த காளான் 2 அடி உயரம் 3 அடி அகலத்தில் 3 அடுக்குகளைக் கொண்டு வளர்ந்து இருந்தது.
இந்த காளானை சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான மக்கள் பார்த்துச் சென்றனர். மேலும் சில பெண்கள் காளானுக்கு மஞ்சள், குங்குமம் வைத்து பூஜை செய்து வழிபட்டனர். இச்சம்பவம் அப்பகுதிமக்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.