இந்தியா (National)

மகள் விபச்சாரத்தில் சிக்கியதாக வந்த போன் கால்.. மாரடைப்பால் சரிந்து விழுந்த தாய் - விபரீத மோசடி

Published On 2024-10-04 02:47 GMT   |   Update On 2024-10-04 05:05 GMT
  • நான் சொல்லும் வங்கிக்கணக்கில் 1 லட்சம் ருபாய் டெபாசிட் செய்தால் உங்கள் மகள் மீது எந்த வழக்கும் இல்லாமல் பார்த்துக்கொள்கிறோம்
  • அந்த நம்பர் +92 என்று தொடங்கியதால் அது போலி அழைப்பு என்று மகள் தாய் மால்தியை ஆறுதல் படுத்தியுள்ளார்.

செல்போனில் போலி அழைப்புகளால் நடக்கும் ஏமாற்று வேலைகள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளன. இதன் உச்சமாக போலி அழைப்பினால் அரசப் பள்ளி ஆசிரியை ஒருவர் உயிரிழந்த சம்பவம் பலரிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள அரசுப் பள்ளியொன்றில் பணியாற்றி வந்தவர் 58 வயதான மால்தி வர்மா[Malti Verma]. இவருக்கு காலேஜ் செல்லும் வயதில் மகள் ஒருவரும் மற்றொரு மகளும் உள்ளனர் .

இந்நிலையில் கடந்த திங்கள்கிழமை அன்று பள்ளியில் வேலை செய்துகொண்டிருந்த மால்தியின் மொபைல் எண்ணுக்கு வாட்சப் கால் ஒன்று வந்துள்ளது. அந்த அழைப்பை செய்தவரின் ப்ரொபைல் டிஸ்பிலேவில் போலீஸ் உடையணிந்த ஒருவரின் படம் இருந்துள்ளது.

போனை எடுத்து மால்தி பேசிய நிலையில் மறுபுறம் இருந்து பேசிய நபர், 'உங்களின் மகள் விபச்சாரத்தில் ஈடுபட்டபோது போலீசில் பிடிபட்டுள்ளார். நான் சொல்லும் வங்கிக்கணக்கில் 1 லட்சம் ருபாய் டெபாசிட் செய்தால் உங்கள் மகள் மீது எந்த வழக்கும் இல்லாமல் பார்த்துக்கொள்கிறோம். பணம் அனுப்பிய பின்னர் அவர் பத்திரமாக வீடு வந்து சேர்வார்' என்று கூறியுள்ளார்.

இதைக் கேட்டு பதற்றமடைந்த மால்தி தனது மற்றொரு மகளுக்கு போன் செய்து விஷயத்தை சொல்லி வாட்சப் கால் வந்த நம்பரை மகளிடம் சொல்லியுள்ளார். அந்த நம்பர் +92 என்று தொடங்கியதால் அது போலி அழைப்பு என்று மகள் தாய் மால்தியை ஆறுதல் படுத்தியுள்ளார்.

மேலும் காலேஜில் இருந்த சகோதரிக்கும் போன் செய்து அவர் பத்திரமாக இருப்பதை உறுதிப்படுத்தி தாய்க்கு ஆறுதல் அளித்துள்ளார். ஆனாலும் பதற்றத்துடனேயே இருந்த மால்தி வீடு திரும்பியதும் அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.போலி அழைப்பு தொடர்பாக மால்தி யின் குடும்பம் புகார் அளித்த நிலையில் போலீசார் அதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

Similar News