இந்தியா

மனித கடத்தல் சந்தேகம்: பிரான்ஸில் தரையிறக்கப்பட்ட இந்தியர்கள் மும்பை அழைத்து வரப்பட்டனர்

Published On 2023-12-26 01:29 GMT   |   Update On 2023-12-26 01:29 GMT
  • வாடகைக்கு அமர்த்தப்பட்ட விமானம் பிரான்ஸ் விமான நிலையத்தில் தரையிறங்கியபோது தகவல் கசிந்தது.
  • மனித கடத்தல் நடந்திருக்கலாம் என பிரான்ஸ் அதிகாரிகள் சந்தேகப்பட்டதால் தடுத்து நிறுத்தி வைத்தனர்.

பிரான்ஸ் நாட்டின் வாட்ரி விமான நிலையத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக ருமேனியாவைச் சேர்ந்த பெரிய விமான நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் தரையிறங்கியது. அந்த விமானத்தில் 303 இந்தியர்கள் இருந்தனர். அனைவரும் இந்தியர்கள், விமானமும் வாடகைக்கு அமர்த்தப்பட்டிருந்தது. இதனால் மனித கடத்தலாக இருக்கலாம் என பிரான்ஸ் அதிகாரிகள் சந்தேகப்பட்டு அனைவரையும் தரையிறக்கினர்.

விமான நிலையத்திலேயே தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இருவர் மனித கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டதாக கருதி அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர். இது தொடர்பாக இந்திய தூதரகத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

இந்திய தூதரகம் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். கடந்த 4 நாட்களாக அவர்கள் வாட்ரி விமான நிலையத்திலேயே தங்கியிருந்த நிலையில், நேற்று பிரான்ஸில் இருந்து 276 பேர் ஏர்பஸ் ஏ340 விமானம் மூலம் இந்தியா அனுப்பி வைக்கப்பட்டனர். இன்று காலை 4 மணிக்கு அந்த விமானம் மும்பை விமான நிலையம் வந்தடைந்தது.

2 சிறுவர்கள் உள்பட 25 பேர் ஸ்பெயினில் புகலிடம் கேட்டுள்ளதால், அவர்கன் அங்கேயே தங்க வைக்கப்பட்டுள்ளனர். இருவர் கைது செய்யப்பட்டு நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்கள் காட்சிகளுக்காக அங்கேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.

துபாயில் இருந்து நிகாரகுவா சென்ற விமானம் பிரான்ஸில் தரையிறங்கியதால் விமானத்தில் இந்தியர்கள் இருந்தது தெரியவந்தது. அமெரிக்காவில் புகலிடம் கேட்பதற்கு நிகாரகுவா சிறந்த இடமாக மாறியுள்ளது. 2023 நிதியாண்டில் மட்டும் 96,917 பேர் அமெரிக்காவில் இந்தியர்கள் சட்டவிரோதமாக குடியேற முயன்றதாக தகவல் தெரிவிக்கிறது. இது முந்தைய நிதியாண்டை விட 51.61 சதவீதம் அதிகமாகும். 

Tags:    

Similar News