இந்தியா
ஒடிசாவின் முதல் வந்தே பாரத் ரெயில் சேவை - பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்
- ஒடிசாவின் முதல் வந்தே பாரத் ரெயில் சேவையை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார்.
- இந்த ரெயில் ஒடிசாவின் பூரியில் இருந்து மேற்கு வங்காளத்தின் ஹவுரா வரை செல்லும்.
புவனேஷ்வர்:
ஒடிசாவின் முதல் வந்தே பாரத் ரெயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த ரெயில் ஒடிசா மாநிலத்தின் பூரியில் இருந்து மேற்கு வங்காள மாநிலம் ஹவுரா வரை செல்லும்
மேலும், 8,200 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு ரெயில்வே திட்டங்களையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
அப்போது பேசிய பிரதமர் மோடி, வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ஹவுரா மற்றும் பூரி இடையே மத, கலாச்சார மற்றும் ஆன்மீக இணைப்பை மேலும் வலுப்படுத்தும். தற்போது நாட்டில் 15 வந்தே பாரத் ரெயில்கள் செயல்பட்டு வருகின்றன. அவை இணைப்பு மற்றும் பொருளாதாரம் ஆகிய இரண்டையும் மேம்படுத்துகின்றன என தெரிவித்தார்.