இந்தியா

3வது காலாண்டில் இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி 8.4 சதவீதம் வளர்ச்சி: பிரதமர் மோடி பெருமிதம்

Published On 2024-02-29 15:49 GMT   |   Update On 2024-02-29 15:49 GMT
  • மூன்றாவது காலாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 8.4 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.
  • இது இந்திய பொருளாதாரத்தின் வலிமையையும், திறனையும் காட்டுகிறது என்றார் பிரதமர் மோடி.

புதுடெல்லி:

மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 2-வது காலாண்டில் 7.6 சதவீத வளர்ச்சி கண்டிருந்தது. 2023-24 நிதியாண்டின் 3-வது காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 8.4 சதவீத வளர்ச்சியைக் கண்டுள்ளது.

இது இந்தியப் பொருளாதாரத்தின் வேகமான வளர்ச்ச்சியை காட்டுகிறது. கட்டுமானத்துறை, உற்பத்தித் துறையில் கண்டுள்ள வளர்ச்சி விகிதங்களே இதற்கு காரணம் என தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக, பிரதமர் மோடி எக்ஸ் வலைதளத்தில், 2023-24 மூன்றாம் காலாண்டில் பதிவாகியுள்ள 8.4 சதவீத ஜிடிபி வளர்ச்சி என்பது இந்தியப் பொருளாதாரத்தின் வலிமையையும் அதன் திறனையும் காட்டுகிறது. 140 கோடி இந்தியர்கள் சிறந்த வாழ்க்கை வாழவும், வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்கவும் உதவும் என பதிவிட்டுள்ளார்.

Tags:    

Similar News