பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் மன்னிப்பு கேட்க நேரிடும் - ராகுல்காந்தி எச்சரிக்கை
- விவசாய சட்டங்கள் மீண்டும் கொண்டு வரப்பட வேண்டும் என்று கங்கனா பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
- இதனையடுத்து, தனது கருத்துக்கு வருத்தம் தெரிவித்து கங்கனா வீடியோ வெளியிட்டுள்ளார்.
பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் பா.ஜ.க. சார்பில் இமாச்சல பிரதேச மாநிலம் மண்டி தொகுதியில் இருந்து மக்களவை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
விவசாய சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தியதை கங்கனா
விமர்சித்து பேசி வருகிறார். இதனால் கங்கனா ரனாவத்திற்கு எதிராக விவசாயிகள் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் விவசாய சட்டங்கள் மீண்டும் கொண்டு வரப்பட வேண்டும் என்று கங்கனா பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
கங்கானாவின் இந்த கருத்துக்கு பாஜக கட்சியே எதிர்ப்பு தெரிவித்ததால் தனது கருத்துக்கு வருத்தம் தெரிவித்து கங்கனா வீடியோ வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார்.
அதில், "இந்திய அரசின் கொள்கைகளை தீர்மானிப்பது யார்?, பாஜக எம்.பி.,யா? அல்லது பிரதமர் நரேந்திர மோடியா?
ஹரியானா, பஞ்சாப் மாநில விவசாயிகள் உட்பட 700க்கும் மேற்பட்டோர் தங்கள் உயிரை தியாகம் செய்த பிறகும் பாஜகவினர் திருப்தி அடையவில்லை. நமது விவசாயிகளுக்கு எதிரான பாஜகவின் எந்த சதியும் வெற்றி பெற I.N.D.I.A. கூட்டணி அனுமதிக்காது விவசாயிகளுக்குத் தீங்கு விளைவிக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டால், பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் மன்னிப்பு கேட்க நேரிடும்" என்று தெரிவித்துள்ளார்.