இந்தியா

மரணமே இல்லாதது தியாகம் என்பதை கார்கில் வெற்றி உணர்த்துகிறது- பிரதமர் மோடி

Published On 2024-07-26 05:16 GMT   |   Update On 2024-07-26 05:16 GMT
  • கார்கில் போரில் உயிர் தியாகம் செய்த ஒவ்வொரு வீரருக்கும் நாடே தலைவணங்குகிறது.
  • வரலாற்றில் இருந்து பாகிஸ்தான் இதுவரை பாடம் கற்றுக்கொள்ளவில்லை.

கார்கில் பயணத்தின் ஒரு பகுதியாக, ஷிங்குன் லா சுரங்கப்பாதை திட்டத்தை பிரதமர் தொடங்கி வைத்தார்.

ஷிங்குன் லா சுரங்கப்பாதை திட்டமானது 4.1 கிமீ நீளமுள்ள இரட்டைக் குழாய் சுரங்கப்பாதை திட்டத்தை பிரதமர் தொடங்கி வைத்த பின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

* கார்கில் போரில் உயிர் தியாகம் செய்த ஒவ்வொரு வீரருக்கும் நாடே தலைவணங்குகிறது.

* கார்கில் போரில் உயிர் தியாகம் செய்த ஒவ்வொரு வீரர்களுக்கும் நாம் கடமைப்பட்டிருக்கிறோம்.

* தேசத்திற்காக செய்த தியாகங்கள் நிலையானவை என்பதை கார்கில் போர் வெற்றி தினம் நமக்கு நினைவூட்டுகிறது.

* இந்தியாவை சீர்குலைக்கும் நோக்கில் எவர் ஒருவர் நம் நாட்டை அணுகினாலும் அடக்கி ஒடுக்கப்படுவர்.

* வரலாற்றில் இருந்து பாகிஸ்தான் இதுவரை பாடம் கற்றுக்கொள்ளவில்லை.

* மரணமே இல்லாதது தியாகம் என்பதை கார்கில் வெற்றி நமக்கு உணர்த்துகிறது.

* அனைத்து விதமான பயங்கரவாத அச்சுறுத்தல்களையும் முறியடிப்போம்.

* பயங்கரவாதிகளின் எண்ணம் ஒருபோதும் ஈடேறாது என்று பாகிஸ்தானை பிரதமர் மோடி எச்சரித்தார்.

Tags:    

Similar News