இந்தியா

ரேபரேலியை புறக்கணித்த சோனியா காந்தி இப்போது மகனுக்காக வாக்கு கேட்கிறார்- பிரதமர் மோடி

Published On 2024-05-19 16:53 GMT   |   Update On 2024-05-19 16:53 GMT
  • கோவிட் தொற்று காலத்திற்கு பிறகு ஒரு முறை கூட தனது தொகுதிக்குச் செல்லவில்லை.
  • ஜார்கண்ட் இதுபோன்ற குடும்பம் சார்ந்த கட்சிகளிடம் இருந்து காப்பாற்றப்பட வேண்டும்.

ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ஜம்ஷத்பூரில் பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.

அப்போது, சோனியா காந்தி ரேபரேலியில் தேர்தல் பேரணியில் உரையாற்றிபோது தனது மகனை (ராகுல் காந்தியை) தனது தொகுதி மக்களிடம் ஒப்படைப்பதாக கூறியதற்கு பிரதமர் மோடி பதிலடி கொடுத்துள்ளார்.

இதுகுறித்து பிரதமர் மோடி மேலும் பேசியதாவது:-

சோனியா காந்தி பிரச்சாரத்திற்காக ரேபரேலிக்கு சென்று தனது மகனை அவர்களிடம் ஒப்படைப்பதாக கூறினார். ரேபரேலியில் நீண்ட காலமாக பணியாற்றிய ஒரு கட்சிக்காரரையாவது அவர் பார்த்திருப்பாரா?

அவர், கோவிட் தொற்று காலத்திற்கு பிறகு ஒரு முறை கூட தனது தொகுதிக்குச் செல்லவில்லை. இப்போது அவர் தனது மகனுக்காக வாக்குகளைக் கேட்கிறார். அவர்கள் அந்த இடத்தை தங்கள் குடும்பச் சொத்தாக நினைக்கிறார்கள்.

காங்கிரஸ் இளவரசர் தேர்தலில் போட்டியிட வயநாட்டில் இருந்து ரேபரேலிக்கு ஓடிவிட்டார். இது என் அம்மாவின் தொகுதி என்று எல்லோரிடமும் சொல்லிக்கொண்டு திரிகிறார்.

எட்டு வயசுக் குழந்தை படிக்கப் போனாலும், அப்பாவே அந்த பள்ளியில் படித்திருந்தாலும் அதை அப்பாவின் பள்ளி என்று சொல்வதில்லை.

இந்த குடும்பம் சார்ந்தவர்கள் பாராளுமன்ற ஆசனங்களின் உயிலை எழுதுகிறார்கள். ஜார்கண்ட் இதுபோன்ற குடும்பம் சார்ந்த கட்சிகளிடம் இருந்து காப்பாற்றப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News