இந்தியா

ஸ்பெயின் பிரதமரிடம் தொலைபேசியில் பேசிய மோடி... உறவுகளை மேலும் வலுப்படுத்த ஆலோசனை

Published On 2023-02-15 17:10 GMT   |   Update On 2023-02-15 17:10 GMT
  • மோடியுடனான உரையாடல் பயனுள்ளதாக இருந்ததாக ஸ்பெயின் பிரதமர் கூறி உள்ளார்.
  • இந்தியாவின் ஜி20 தலைமைப் பதவிக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்தார்

புதுடெல்லி:

இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செசை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார். அப்போது, இரு நாடுகளுக்கு இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினர்.

இதுதொடர்பாக மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ஸ்பெயின் பிரதமரை தொடர்பு கொண்டு பேசியதில் மகிழ்ச்சி. வளர்ந்து வரும் இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்து நாங்கள் விவாதித்தோம். இந்தியாவின் ஜி20 தலைமையின் ஒரு பகுதியாக, எங்களது நெருக்கமான ஒத்துழைப்பை தொடருவோம், என மோடி குறிப்பிட்டுள்ளார்.

மோடியுடனான உரையாடல் பயனுள்ளதாக இருந்ததாக ஸ்பெயின் பிரதமர் கூறி உள்ளார். இந்தியாவின் ஜி20 தலைமைப் பதவிக்கு ஸ்பெயின் ஆதரவு அளிப்பதாக மீண்டும் தெரிவித்தேன். இருதரப்பு உறவுகளை, குறிப்பாக பொருளாதாரம் மற்றும் வர்த்தகம் ஆகிய துறைகளில் தொடர்ந்து உறவுகளை வலுப்படுத்த இருவரும் ஒப்புக்கொண்டுள்ளோம், எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News