இந்தியா (National)

தேசிய ஜனநாயக கூட்டணி முதல் மந்திரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை

Published On 2024-10-17 23:59 GMT   |   Update On 2024-10-17 23:59 GMT
  • தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல் மந்திரிகள் கூட்டம் நடந்தது.
  • இந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று கலந்துரையாடினார்.

சண்டிகர்:

அரியானா சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று பா.ஜ.க முதல் மந்திரி நயாப் சிங் சைனி தலைமையிலான அமைச்சரவை நேற்று பதவியேற்றது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, மூத்த அமைச்சர்கள் மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணியைச் சேர்ந்த முதல் மந்திரிகளான சந்திரபாபு நாயுடு, ஏக்நாத் ஷிண்டே உள்பட பலர் பங்கேற்றனர்.

பதவியேற்பு நிகழ்ச்சிக்கு பின் தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல் மந்திரிகள் மற்றும் துணை முதல் மந்திரிகள் கூட்டம் நடந்தது.

இந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடி, ராஜ்நாத் சிங், அமித் ஷா மற்றும் ஜே.பி.நட்டா ஆகியோர் பங்கேற்றனர். அரியானா சட்டசபை தேர்தலில் வெற்றிபெற்றது போல், மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் தேர்தலிலும் தேசிய ஜனநாயக கூட்டணியை வெற்றிபெறச் செய்வது குறித்து விவாதிக்கப்பட்டது.

இதுதொடர்பாக, பிரதமர் மோடி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், நல்ல ஆட்சி நிர்வாகம் மற்றும் மக்களின் வாழ்வை மேம்படுத்துவதற்கான வழிகள் குறித்து முதல் மந்திரிகளுடனான கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. எங்கள் கூட்டணி ஏழைகள் மற்றும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு அதிகாரம் அளிப்பதில் உறுதியாக உள்ளது என பதிவிட்டுள்ளார்.

Tags:    

Similar News