கஜகஸ்தான் சுற்றுப் பயணத்தை நிராகரித்த பிரதமர் மோடி
- மாநாடு ஜூலை 3 மற்றும் 4-ந்தேதிகளில் நடைபெற இருக்கிறது.
- இந்தியா, ரஷியா, பாகிஸ்தான், கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகள் இந்த அமைப்பில் இடம் பிடித்துள்ளது.
இந்திய பிரதமர் மோடி கஜகஸ்தானில் நடைபெற இருக்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (Shanghai Cooperation Organisation) உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக கஜகஸ்தான் செல்வதாக எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், பிரதமர் மோடி இந்த பயணத்தை புறக்கணித்துள்ளதாக இந்திய வெறியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் தலைமையில் இந்திய அதிகாரிகள் இந்த மாநாட்டில் கலந்து கொள்வார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாநாட்டில் ரஷிய அதிபர் புதின், சீன அதிபர் ஜி ஜின்பிங், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாநாடு ஜூலை 3 மற்றும் 4-ந்தேதிகளில் நடைபெற இருக்கிறது.
இந்த வருடம் இந்தியா இந்த மாநாட்டை காணொலி காட்சி வாயிலாக நடத்தியது. இந்த அமைப்பு சீனா கடந்த 2001-ம் ஆண்டு அமைத்தது. இந்தியா, ரஷியா, பாகிஸ்தான், கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகள் இந்த அமைப்பில் இடம் பிடித்துள்ளது. 2017-ல் இருந்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் நிரந்தர உறுப்பினர்களாகின.