இந்தியா

3வது முறையாக ஆட்சி அமைக்க வாய்ப்பளித்த மக்களுக்கு நன்றி: பிரதமர் மோடி

Published On 2024-06-04 14:09 GMT   |   Update On 2024-06-04 14:09 GMT
  • வாரணாசியில் போட்டியிட்ட பிரதமர் மோடி 6 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் பெற்றார்.
  • தற்போது வரை பா.ஜ.க. 110க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.

புதுடெல்லி:

பாராளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகிறது. தற்போதைய நிலவரப்படி, பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 290-க்கும் அதிகமான இடங்களில் முன்னிலை வருகிறது.

தற்போதைய நிலவரப்படி பா.ஜ.க. 110க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் போட்டியிட்ட பா.ஜ.க. வேட்பாளர் பிரதமர் மோடி வெற்றி பெற்றார். இவர் 6,12,970 வாக்குகள் பெற்றார்.

இந்நிலையில், மூன்றாவது முறையாக தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்க மக்கள் வாய்ப்பு கொடுத்துள்ளனர் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், மக்கள் தொடர்ந்து 3-வது முறையாக தேசிய ஜனநாயக கூட்டணி மீது நம்பிக்கை வைத்துள்ளனர். இந்திய வரலாற்றில் இது ஒரு வரலாற்று சாதனை. இந்த பாசத்திற்காக மக்களுக்கு நான் தலைவணங்குகிறேன். கடந்த 10 ஆண்டுகளில் மக்களின் விருப்பங்களை நிறைவேற்றும் வகையில் நாங்கள் செய்த நல்ல பணிகளைத் தொடர்வோம் என உறுதி அளிக்கிறேன். எங்கள் அனைத்து காரியகர்த்தாக்களுக்கும் அவர்களின் கடின உழைப்புக்கும் நான் தலை வணங்குகிறேன் என பதிவிட்டுள்ளார்.

Tags:    

Similar News