இந்தியா

வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி வெற்றி

Published On 2024-06-04 11:47 GMT   |   Update On 2024-06-04 11:53 GMT
  • தற்போதைய நிலவரப்படி பா.ஜ.க. 24 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.
  • வாரணாசியில் போட்டியிட்ட பிரதமர் மோடி 6 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் பெற்றார்.

லக்னோ:

பாராளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகிறது. தற்போதைய நிலவரப்படி, பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 295-க்கும் அதிகமான இடங்களில் முன்னிலை வருகிறது.

தற்போதைய நிலவரப்படி பா.ஜ.க. 24 தொகுதிகளில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் போட்டியிட்ட பா.ஜ.க. வேட்பாளர் பிரதமர் மோடி வெற்றி பெற்றார்.

இவர் 6,12,970 வாக்குகள் பெற்றார்.

இவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் அஜய் ராய் 4,60,457 வாக்குகள் பெற்றுள்ளார். இருவருக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் 1,52,513 ஆகும்.

கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற வாரணாசி தேர்தலில் பிரதமர் மோடி 5,81,022 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

பாராளுமன்ற தேர்தலில் 3வது முறையாக வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News