வெட்கமே இல்லாமல் ஊழல்களை ஒப்புக் கொண்ட கட்சி காங்கிரஸ்: பிரதமர் மோடி விமர்சனம்
- மணிப்பூருக்கு நீதி வேண்டும் எனக்கோரி எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர்.
- எதிர்க்கட்சியினரின் அமளி செயல் தவறு என சபாநாயகர் கண்டனம் தெரிவித்தார்.
புதுடெல்லி:
பாராளுமன்ற மக்களவையில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி பதிலளித்துப் பேசி வருகிறார். அப்போது எதிர்க்கட்சி எம்.பி.க்கள் குறுக்கிட்டதுடன், அவையில் கோஷங்களை எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். அப்போது பிரதமர் மோடி பேசியதாவது:
எங்கள் ஆட்சியில் 25 கோடி பேர் ஏழ்மையில் இருந்து விடுபட்டுள்ளனர்.
தேசத்தின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு நாங்கள் ஆட்சி செய்து வருகிறோம்.
ஊழலை சிறிதுகூட சகித்துக் கொள்ள முடியாத வகையில் நாங்கள் ஆட்சி செய்தோம்.
வாக்கு வங்கிக்காக அல்ல, அனைவருக்கும் நீதி என்ற வகையில் ஆட்சி செய்து வருகிறோம்.
வாக்கு வங்கி அரசியலைப் புறக்கணித்து மதச்சார்பின்மையை மக்கள் தேர்வு செய்துள்ளனர்.
தோல்வியால் சிலருக்கு ஏற்பட்டுள்ள வலியை எங்களால் புரிந்துகொள்ள முடிகிறது.
வெட்கமே இல்லாமல் ஊழல்களை ஒப்புக் கொண்ட கட்சி காங்கிரஸ்.
காங்கிரஸ் ஆட்சியில் ஊழல் செய்வதில் போட்டி இருந்தது.
வருங்கால தலைமுறைக்காக வலிமையான பாரதத்தை உருவாக்க வேண்டும் என ஆட்சி செய்து வருகிறோம்.
இதற்கிடையே, மணிப்பூருக்கு நீதி வேண்டும் எனக்கோரி எதிர்க்கட்சியினர் அவையின் மையப்பகுதிக்கு வந்து அமளியில் ஈடுபட்டனர். எதிர்க்கட்சியினரின் அமளி செயல் தவறு என சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம் தெரிவித்துள்ளார்.