இந்தியா

வாக்குகளை பெற பிரதமர் மோடி எனது உடல் நலம் குறித்து பேசியது துரதிருஷ்டவசமானது: நவீன் பட்நாயக்

Published On 2024-05-30 15:41 GMT   |   Update On 2024-05-30 15:41 GMT
  • ஒடிசாவில் பிஜு ஜனதா தளம்- பா.ஜனதா இடையே நேரடி போட்டி நிலவுகிறது.
  • தேர்தலின்போது பிரதமர் மோடி நவீன் பட்நாயக்கின் உடல்நலம் குறித்து பேசினார்.

ஒடிசாவில் பா.ஜனதாவும், நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளமும் இணைந்து போட்டியிடுவதாக முடிவு செய்தது. ஆனால் தொகுதி பங்கீட்டில் உடன்பாடு எட்டப்படவில்லை. இதனால் இரண்டு கட்சிகளும் தனித்து போட்டியிடுகின்றன. கடைசி கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நாளை மறுதினம் நடைபெறுகிறது.

ஒடிசாவில் பிரசாரம் மேற்கொண்ட பிரதமர் மோடி, நவீன் பட்நாயக்கிற்கு வயதாகிவிட்டது. வயது மூப்பு காரணமாக ஓய்வு பெற்றுக் கொள்ள வேண்டும் என அவருடைய உடல் நலம் குறித்து பிரசார கூட்டங்களில் பேசினார்.

அதற்கு நவீன் பட்நாயக், தான் ஆரோக்கியத்துடன் இருக்கிறேன். மாநிலம் முழுவதும் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வருகிறேன் என பதில் அளித்திருந்தார்.

இந்த நிலையில் தற்போது வாக்கிற்காக தனது உடல் நலம் குறித்து பேசியது துரதிருஷ்டவசமானது என நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக நவீன் பட்நாயக் கூறுகையில் "மோடி வாக்குகளை பெறுவதற்காக எனது உடல் நலம் குறித்து பேசியது துரதிருஷ்டவசமானது. என்னை அவருடைய சிறந்த நண்பர் என பிரதமர் சொல்கிறார். அப்படி என்றால் டெலிபோன் மூலம் என்னை தொடர்பு கொள்ள முடியாதா?. அதற்குப் பதிலாக வாக்குகளை பெற தேர்தல் பேரணி கூட்டத்தில் பேசிக் கொண்டிருக்கிறார்" என்றார்.

Tags:    

Similar News