இந்தியா

சீரும் பாம்பை நம்பு... காரில் ஒட்டப்பட்டிருந்த பெண்களை அவமதிக்கும் ஸ்டிக்கரை அகற்றிய போலீஸ்

Published On 2024-07-28 05:24 GMT   |   Update On 2024-07-28 05:24 GMT
  • கொல்கத்தாவில் ஒருவர் தனது காருக்கு பின்பு, BELIEVE A SNAKE NOT A GIRL என்று எழுதியுள்ளார்.
  • சீரும் பாம்பை நம்பு சிரிக்கும் பெண்ணை நம்பாதே என்ற வாசகத்தை நாம் பார்த்திருப்போம்.

மேற்குவங்காள மாநில தலைநகர் கொல்கத்தாவில் பெண்களை அவமதிக்கும் வகையில் காரில் ஒட்டப்பட்டிருந்த ஸ்டிக்கரை போலீசார் அகற்றினர்.

கொல்கத்தாவில் ஒருவர் தனது காருக்கு பின்பு, BELIEVE A SNAKE NOT A GIRL என்று எழுதியுள்ளார். அதாவது பாம்பை கூட நம்பலாம் ஆனால் பெண்ணை நம்பாதே என்று பொருள் கொள்ளும் இந்த வாசகத்தை ஸ்டிக்கராக ஒட்டியுள்ளார்.

காரில் ஒட்டப்பட்டுள்ள இந்த ஸ்டிக்கரை யதார்த்தமாக பார்த்த போலீஸார் கார் உரிமையாளரை கண்டறிந்து அவரிடம் பக்குவமாக பேசி ஸ்டிக்கரை அகற்ற வைத்துள்ளனர்.

பொதுவெளியில் இதுபோன்ற வாசகத்தை வெளிப்படையாக பதிவிடுவது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றம் என எக்ஸ் பக்கத்தில் கொல்கத்தா போலீசார் பதிவிட்டுள்ளனர். கொல்கத்தா போலீசின் இந்த செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.

நம் ஊர்களில் ஆட்டோக்களுக்கு பின்பு சீரும் பாம்பை நம்பு சிரிக்கும் பெண்ணை நம்பாதே என்ற வாசகம் எழுதப்பட்டுள்ளதை நாம் அவ்வப்போது பார்த்திருப்போம். கொல்கத்தா போலீசாரை போல தமிழ்நாடு போலீசாரும் பெண்களை அவமதிக்கும் இத்தகைய ஸ்டிக்கரை பார்த்தால் அதை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நெட்டிசன்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags:    

Similar News