இந்தியா

பிரஜ்வல் ரேவண்ணா ஆபாச வீடியோ விவகாரம்: 700 பெண்கள் புகார் அளித்தனரா?- தேசிய மகளிர் ஆணையம் விளக்கம்

Published On 2024-05-09 11:15 GMT   |   Update On 2024-05-09 11:15 GMT
  • தேவேகவுடா பேரன் பிரஜ்வல் ரேவண்ணா பெண்களுடன் இருக்கும் ஆபாச வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
  • கர்நாடகா போலீசார் சிறப்பு விசாரணைக்குழு அமைத்து இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறது.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் தேவேகவுடாவின் பேரனும், ரேவண்ணாவும் மகனுமான பிரஜ்வல் ரேவண்ணா பெண்களுடன் இருக்கும் ஆபாச வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக கர்நாடகா மாநில காவல்துறையின் எஸ்ஐடி (சிறப்பு விசாரணைக்குழு) விசாரணை நடத்தி வருகிறது. இதற்கிடையே பிரஜ்வல் ரேவண்ணா ஜெர்மனிக்கு சென்று விட்டார். எஸ்ஐடி சம்மன் அனுப்பியும் பிரஜ்வல் ரேவண்ணா நேரில் ஆஜராக வில்லை.

இந்த நிலையில் பிரஜ்வல் ரேவண்ணா ஆபாச வீடியோவால் பாதிக்கப்பட்ட 700 பெண்கள் தேசிய மகளிர் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் 700 பெண்கள் புகார் அளித்துள்ளனர் என வெளியான தகவல் தவறானது. ஆபாச வீடியோ தொடர்பாக எந்த பெண்களும் புகார் அளிக்கவில்லை என தேசிய மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது.

பிரஜ்வலின் தந்தை ரேவண்ணா வீட்டில் வேலைப்பார்த்து வந்த பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக பிரஜ்வல் ரேவண்ணா, அவரது தந்தை ரேவண்ணா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ரேவண்ணா வீட்டில் வேலைப்பார்த்த பெண் கடத்தப்பட்டதாக அளிக்கப்பட்ட புகாரில், ரேவண்ணா மீது ஆட்கடத்தல் வழக்கு போடப்பட்டு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News