இந்தியா

மாநிலங்களின் வளர்ச்சியே தேசத்தின் வளர்ச்சி- ஜனாதிபதி திரவுபதி முர்மு

Published On 2024-06-27 05:50 GMT   |   Update On 2024-06-27 06:08 GMT
  • பாரதத்தில் மீண்டும் பெரும்பான்மை கொண்ட அரசு 3-வது முறையாக ஆட்சி அமைத்துள்ளது.
  • உலக பொருளாதாரத்தில் 5-வது மிகப்பெரிய பொருளாதாரம் என்ற நிலையை இந்தியா அடைந்துள்ளது.

புதுடெல்லி:

பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் முதல் பாராளுமன்ற கூட்டத்தொடர் கடந்த 24ம்தேதி தொடங்கியது. இதில் மக்களவையில் மட்டும் புதிய எம் பிக்கள் பதவியேற்பு, சபாநாயகர் தேர்தல் என முதல் 3 நாட்களும் அலுவல்கள் நடந்தன.

இதைத்தொடர்ந்து புதிய அரசின் முதல் மாநிலங்களவை இன்று கூடியது. பாராளுமன்ற தேர்தலுக்குப் பின் நடைபெறும் முதலாவது கூட்டத்தொடரில் இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று உரையாற்றினார்.

இதற்காக பாராளுமன்றத்திற்கு வந்த ஜனாதிபதி திரவுபதி முர்முவை பிரதமர் மோடி வரவேற்றார். செங்கோலுடன் பாராளுமன்ற அவைக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு அழைத்து செல்லப்பட்டார். துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர், மக்களவை தலைவர் ஓம் பிர்லா உள்ளிட்டோரும் ஜனாதிபதியை வரவேற்றனர்.

இதைத்தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கப்பட்டது. தொடர்ந்து ஜனாதிபதி திரவுபதி முர்மு உரை நிகழ்த்தினார். அவர் கூறுகையில்,

* மக்களவை சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஓம் பிர்லாவுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். தேர்தலை மிகச்சிறப்பாக நடத்தி முடித்ததற்காக தேர்தல் ஆணையத்திற்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். இந்திய நாட்டின் மக்கள் அனைவரும் உற்சாகத்தோடு தங்கள் கடமையை ஆற்றி இருக்கிறார்கள்.

* 18-வது மக்களவையின் புதிய உறுப்பினர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். இந்த முறையும் பெண்கள் அதிக அளவில் வாக்களித்து வரலாறு படைத்துள்ளனர்.

* பாரதத்தில் மீண்டும் பெரும்பான்மை கொண்ட அரசு 3-வது முறையாக ஆட்சி அமைத்துள்ளது.

* 60 ஆண்டுகளுக்கு பின், ஆட்சியில் இருக்கும் அரசு 3-வது முறையாக ஆட்சி அமைத்துள்ளது.

* அரசின் மீது மூன்றாவது முறையாக மக்கள் தங்களது நம்பிக்கையை வெளிப்படுத்தி உள்ளனர்.

* இந்த நிதியாண்டுக்கான முதல் பட்ஜெட் விரைவில் தாக்கல் செய்யப்பட உள்ளது.

* மாநிலங்களின் வளர்ச்சியே தேசத்தின் வளர்ச்சி என்ற சிந்தனையின் அடிப்படையில் முன்னேற்ற பாதையில் நடைபோட்டுக் கொண்டிருக்கிறோம்.

* Reform, perform, transform என்ற சிந்தனையுடன் இந்தியா வேகமாக முன்னேறி வருகிறது.

* உலக பொருளாதாரத்தில் 5-வது மிகப்பெரிய பொருளாதாரம் என்ற நிலையை இந்தியா அடைந்துள்ளது என்று கூறினார்.

Tags:    

Similar News