இந்தியா
நீதித்துறை முற்றிலும் நேர்மையாக, புனிதமாக இருக்கவேண்டும்: மம்தா பானர்ஜி பேச்சு
- நீதித்துறை மக்களுடையது. மக்களுக்காக செயல்படும் என்று நான் நம்புகிறேன்.
- நீதித்துறை எங்களுக்கு முக்கியமான கோயில் என்றார் மேற்கு வங்காள முதல் மந்திரி.
கொல்கத்தா:
மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் நீதித்துறை வளர்ச்சிகள் குறித்த கருத்தரங்கம் இன்று நடைபெற்றது. இந்தக் கருந்தரங்கில் மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜி, சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சந்திரசூட் உள்பட பலர் பங்கேற்றனர்.
இந்தக் கருத்தரங்கில் முதல் மந்திரி மம்தா பானர்ஜி பேசியதாவது:
நீதித்துறை எங்களுக்கு முக்கியமான கோயில். இது மந்திர் மற்றும் குருத்வாரா போன்றது.
மக்களுக்கு நீதி வழங்குவதில் அதிக கவனம் செலுத்தவேண்டும். நீதித்துறை மக்களுடையது. மக்களுக்காக செயல்படும் என்று நான் நம்புகிறேன்.
யாரையும் இழிவுபடுத்துவது எனது நோக்கமல்ல. ஆனால் நீதித்துறையில் அரசியல் சார்பு இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
நீதித்துறை முற்றிலும் தூய்மையாகவும், நேர்மையாகவும், புனிதமாகவும் இருக்க வேண்டும் என தெரிவித்தார்.