இந்தியா

எமர்ஜென்சிக்கு பின் காங்கிரஸ் பெற்ற வெற்றியை மோடியோ, அவரது கட்சியோ பெறவில்லை: சோனியா காந்தி

Published On 2024-06-29 15:08 GMT   |   Update On 2024-06-29 15:08 GMT
  • பிரிவினைவாதம் மற்றும் வெறுப்பு அரசியலை இந்திய மக்கள் நிராகரித்து விட்டனர்.
  • எமர்ஜென்சி விவகாரத்தில் சபாநாயகரின் நிலைப்பாடு, பாரபட்சம் கொண்டதாகவும், அரசியலாகவும் இருந்தது.

புதுடெல்லி:

காங்கிரஸ் பாராளுமன்ற குழு தலைவர் சோனியா காந்தி தனியார் செய்தி நிறுவனத்துக்கு எழுதிய கட்டுரையில் கூறியதாவது:

பிரிவினைவாதம் மற்றும் வெறுப்பு அரசியலை இந்திய மக்கள் நிராகரித்து விட்டனர் என்பதையே தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.

பாராளுமன்ற தேர்தல் தீர்ப்பு பிரதமர் நரேந்திர மோடிக்கு தனிப்பட்ட, அரசியல் மற்றும் தார்மீக தோல்வியை சுட்டிக்காட்டியுள்ளது. ஆனால் எதுவும் மாறாதது போல் அவர் தொடர்கிறார்.

பிரச்சாரத்தின் போது தனக்கு தெய்வீக அந்தஸ்தை வழங்கிய ஒரு பிரதமருக்கு இது தனிப்பட்ட, அரசியல் மற்றும் தார்மீக தோல்வியைக் குறிக்கிறது.

எமர்ஜென்சி பிரகடனப்படுத்தப்பட்ட விவகாரம் பிரதமராலும், அவரது கட்சியினராலும் தோண்டி எடுக்கப்பட்டு விமர்சிக்கப்பட்டதாகவும், இவ்விஷயத்தில் சபாநாயகரின் நிலைப்பாடு, பாரபட்சம் கொண்டதாகவும், அரசியலாகவும் இருந்தது.

எமர்ஜென்சி பிரகடனத்தை அடுத்து நடந்த தேர்தலில் 1977, மார்ச்சில் நம் நாட்டு மக்கள் ஒரு திட்டவட்டமான தீர்ப்பை வழங்கினர். அந்தத் தீர்ப்பு தயக்கமின்றி, சந்தேகத்துக்கு இடமின்றி ஏற்றுக்கொள்ளப்பட்டது.

அதன்பின், 3 ஆண்டுக்குள் காங்கிரஸ் கட்சி மிகப் பெரிய தேர்தல் வெற்றியைப் பெற்றது. அதுபோன்ற ஒரு வெற்றியை மோடி மற்றும் அவரது கட்சி ஒருபோதும் பெற்றதில்லை. இவையெல்லாம் வரலாற்றின் ஒரு பகுதியாகும்.

நாடுமுழுவதும் பல குடும்பங்களை அழித்த வினாத்தாள் கசிவு குறித்து மத்திய அரசு மௌனமாக உள்ளது. மக்கள் பிரச்சனைகளை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து எழுப்பும். பிரதமரும் அவரது அரசாங்கமும் சாதகமாக பதிலளிப்பார்கள் என நம்புகிறேன்.

கடந்த 10 ஆண்டுகளில் என்.சி.இ.ஆர்.டி, யு.ஜி.சி. போன்ற கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்கலைகழகங்களின் தொழில்முறை ஆழமாக சேதமடைந்துள்ளது.

எதிர்க்கட்சியில் உள்ள நாங்கள் பாராளுமன்றத்தில் சமநிலை மற்றும் செயல்திறனை மீட்டெடுக்க உறுதிபூண்டுள்ளோம் என தெரிவித்தார்.

Tags:    

Similar News