இந்தியா

செங்கோட்டை தாக்குதல் வழக்கு: பாகிஸ்தான் பயங்கரவாதியின் கருணை மனு தள்ளுபடி

Published On 2024-06-12 12:12 GMT   |   Update On 2024-06-12 12:12 GMT
  • செங்கோட்டை தாக்குதல் வழக்கில் லஷ்கர் பயங்கரவாதிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
  • முகமது ஆரிப் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.

புதுடெல்லி:

டெல்லி செங்கோட்டைக்குள் கடந்த 2000-ம் ஆண்டு டிசம்பர் 22-ம் தேதி பயங்கரவாதிகள் சிலர் புகுந்து அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த ராணுவ வீரர்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டனர். இந்த திடீர் தாக்குதலில் 2 ராணுவ வீரர்கள் உள்பட 3 பேர் உயிரிழந்தனர்.

இதுதொடர்பான வழக்கில் பாகிஸ்தானிலிருந்து செயல்படும் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த முகமது ஆரிப் என்கிற அஷ்பக் அடுத்த சில நாட்களில் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த விசாரணை நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்தது. இதனை டெல்லி உயர் நீதிமன்றம் உறுதி செய்தது.

தனக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு எதிராக முகமது ஆரிப் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை சுப்ரீம் கோர்ட் கடந்த 2011-ம் ஆண்டு தள்ளுபடி செய்தது.

இந்நிலையில், செங்கோட்டை தாக்குதல் வழக்கில் தொடர்புடைய பாகிஸ்தான் பயங்கரவாதியின் கருணை மனுவை ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று தள்ளுபடி செய்துள்ளார் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News