இந்தியா

பாராளுமன்றத்தில் இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி இன்று உரை

Published On 2024-06-27 02:11 GMT   |   Update On 2024-06-27 02:11 GMT
  • பாராளுமன்ற தேர்தலுக்குப்பின் நடைபெறும் முதலாவது கூட்டத்தொடரில் இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி உரை நிகழ்த்துவது வழக்கம்.
  • புதிதாக பதவியேற்றுள்ள மத்திய அரசின் முன்னுரிமை திட்டங்களை அவர் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதுடெல்லி:

பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் முதல் பாராளுமன்ற கூட்டத்தொடர் கடந்த 24ம்தேதி தொடங்கியது. இதில் மக்களவையில் மட்டும் புதிய எம் பிக்கள் பதவியேற்பு, சபாநாயகர் தேர்தல் என முதல் 3 நாட்களும் அலுவல்கள் நடந்தன.

இதைத்தொடர்ந்து இன்று (வியாழக்கிழமை) முதல் மாநிலங்களவையும் கூடுகிறது.

பாராளுமன்ற தேர்தலுக்குப்பின் நடைபெறும் முதலாவது கூட்டத்தொடரில் இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி உரை நிகழ்த்துவது வழக்கம்.

அந்தவகையில் இரு அவைகளின் கூட்டுக்கூட்டம் இன்று நடக்கிறது. இதில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரை நிகழ்த்துகிறார்.

இதில் புதிதாக பதவியேற்றுள்ள மத்திய அரசின் முன்னுரிமை திட்டங்களை அவர் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பின்னர் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை ஆளுங்கட்சி தாக்கல் செய்கிறது. இந்த தீர்மானத்துக்கு பிரதமர் மோடி வருகிற 2 மற்றும் 3ம்தேதிகளில் பதிலளிப்பார் என தெரிகிறது.

Tags:    

Similar News