இந்தியா

குரங்கம்மை தடுப்பு- மாநிலங்களுக்கு மத்திய அமைச்சகம் கடிதம்

Published On 2024-09-09 09:23 GMT   |   Update On 2024-09-09 09:23 GMT
  • மருத்துவமனைகளில் தேவையான உபகரணங்கள், மருந்துகள் இருப்பில் உள்ளதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.
  • குரங்கம்மை நோய் சூழலை மத்திய சுகாதார அமைச்சகம் உன்னிப்பாக கண்காணித்து வருகிறது.

குரங்கம்மை நோய் தடுப்பு குறித்து மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கடிதம் அனுப்பி உள்ளது.

அந்த கடிதத்தில், குரங்கம்மை நோய் ஏற்பட்டால் உயிரிழப்பை தடுப்பதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், மாவட்ட மருத்துவமனைகளில் சுகாதார ஆயத்த நிலை குறித்து மூத்த அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.

குரங்கம்மை நோய் இருப்பதாக சந்தேகிக்கப்படும் நபர்கள் மீது தனி கவனம் செலுத்த வேண்டும்.

மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தும் வசதிகளை ஆய்வு செய்ய வேண்டும்.

மருத்துவமனைகளில் தேவையான உபகரணங்கள், மருந்துகள் இருப்பில் உள்ளதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.

குரங்கம்மை நோய் சூழலை மத்திய சுகாதார அமைச்சகம் உன்னிப்பாக கண்காணித்து வருகிறது.

குரங்கம்மை நோய் அறிகுறி நோய் தடுப்பு குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

பொதுமக்களிடம் தேவையற்ற அச்சம் ஏற்படுவதை தடுக்க வேண்டியது அவசியம் என அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags:    

Similar News