இந்தியா
ஜம்முவில் நாளை ரூ.30500 கோடி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் பிரதமர் மோடி
- 1500 பேருக்கு புதிய பணிநியமன ஆணைகளை பிரதமர் மோடி வழங்குகிறார்.
- பல்வேறு அரசு திட்டங்களின் பயனாளிகளுடன் பிரதமர் மோடி உரை.
பிரதமர் நரேந்திர மோடி நாளை (20-ந் தேதி) ஜம்மு செல்கிறார். அங்கு காலை 11-30 மணியளவில், ஜம்முவில் உள்ள மவுலானா ஆசாத் ஸ்டேடியத்தில் நடைபெறும் விழாவில் பிரதமர் ரூ.30,500 கோடி மதிப்பிலான பல வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
சுகாதாரம், கல்வி, ரெயில், சாலை, விமானப்போக்குவரத்து, பெட்ரோலியம், குடிமை உள்கட்டமைப்பு உள்ளிட்ட பலதுறைகளுடன் தொடர்புடைய திட்டப்பணிகள் இதில் அடங்கும்.
இந்த நிகழ்ச்சியின்போது ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 1500 பேருக்கு புதிய பணிநியமன ஆணைகளை பிரதமர் மோடி வழங்குகிறார்.
மேலும், விக்சித் பாரத் விக்சித் ஜம்மு' திட்டத்தின் ஒரு பகுதியாக, பல்வேறு அரசு திட்டங்களின் பயனாளிகளுடன் பிரதமர் மோடி உரையாடுகிறார்.