இந்தியா

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

Published On 2023-12-08 07:33 GMT   |   Update On 2023-12-08 07:33 GMT
  • 21-ம் நூற்றாண்டில் மூன்றாவது தசாப்தம் உத்தரகாண்ட்-க்கு சொந்தமானது என்ற எனது கணிப்பு நனவாகும்.
  • வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு நம்முடைய பொருளாதாரம் குறித்த நம்பிக்கை வளர்ந்துள்ளது.

ளஉத்தரகாண்ட் மாநிலம் டேராடூன் வன ஆராய்ச்சி இன்ஸ்டிடியூட்டில் இரண்டு நாள் உலக முதலீட்டார்கள் மாநாட்டை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன்படி இன்றும், நாளையும் இந்த மாநாடு நடைபெற இருக்கிறது.

இந்த மாநாட்டை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி இன்று காலை உத்தரகாண்ட் மாநிலம் டேராடூன் வந்தார். ரோடு ஷோ நடத்திய அவருக்கு மக்கள் சாலையோரம் நீண்ட வரிசையில் நின்று வரவேற்பு அளித்தனர்.

பின்னர் மாநாடு நடைபெறும் அரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கண்காட்சி மையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அதன்பின் மாநாட்டை தொடங்கி வைத்தார்.

மாநாட்டை தொடங்கி வைத்து பேசிய பிரதமர் மோடி "21-ம் நூற்றாண்டில் மூன்றாவது தசாப்தம் உத்தரகாண்ட்-க்கு சொந்தமானது என்ற எனது கணிப்பு நனவாகும். வெளிநாட்டு முதலீட்டாளர்கள், கட்டுப்பாட்டாளர்களிடம் நம்முடைய பொருளாதாரம் குறித்த நம்பிக்கை வளர்ந்துள்ளது. உத்தரகாண்ட் தெய்வீகத்தையும், வளர்ச்சியையும் இணைக்கிறது. தெய்வீக பூமியான உத்தரகாண்ட் நிச்சயம் உங்களுக்கான ஏராளமான வாய்ப்புகளை உருவாக்கும்.

வளர்ச்சி மற்றும் பாரம்பரியம் என்ற மந்திரத்துடன் இந்தியா முன்னேறி வருவதுற்கு இன்று உத்தரகாண்ட் சிறந்த எடுத்துக்காட்டு" என்றார்.

Tags:    

Similar News