இந்தியா

வயநாடு தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டி- கார்கே அறிவிப்பு

Published On 2024-06-17 14:11 GMT   |   Update On 2024-06-17 14:29 GMT
  • ராகுல்காந்தி ரேபரேலி எம்.பியாக ராகுல் காந்தி தொடருவார் என அறிவிப்பு.
  • வயநாடு மக்களுக்கு ராகுல் காந்தி நன்றி தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி வயநாடு மற்றும் ரேபரேலி என இரண்டு தொகுதிகளிலும் போட்டியிட்டு அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றார்.

கேரளாவின் வயநாடு தொகுதியில் போட்டியிட்ட ராகுல் காந்தி 6,47,445 வாக்குகள் பெற்றார்.

இவரை எதிர்த்து போட்டியிட்ட கம்யூனிஸ்ட் வேட்பாளர் ஆன்னி ராஜா 2,83,023 வாக்குகள் பெற்றுள்ளார். இருவருக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் 3,64,422 ஆகும்.

இந்த சூழலில், ராகுல் காந்தி இந்த இரு தொகுதிகளில் எந்த தொகுதியில் எம்பியாக தொடருவார் என்ற குழப்பம் நீடித்து வந்தது.

சட்டப்படி, ஒரு தொகுதியின் எம்.பியாக மட்டுமே ஒருவர் தொடர முடியும் என்பதால் ராகுல் காந்தி எந்த தொகுதியை தியாகம் செய்வார் என்ற கேள்வி தேர்தல் முடிவுகள் வெளியான கடந்த ஜூன் 4 முதலே எழத் தொடங்கியது. இதற்கிடையில் கேரளா வந்த ராகுல் காந்தி, தான் எந்த தோகுதி எம்.பியாக தொடர வேண்டும் என்பதை மக்களைக் கேட்டே முடிவெடுப்பேன் என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், ராகுல்காந்தி ரேபரேலி எம்.பியாக ராகுல் காந்தி தொடருவார் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூனா கார்கே அறிவித்துள்ளார்.

இதனால், வயநாடு தொகுதி எம்.பி பதவியை ராகுல்காந்தி ராஜினாமா செய்கிறார். இதைதொடர்ந்து, வயநாடு தொகுதியில் காங்கிரஸ் பொதுசு் செயலாளர் பிரியங்கா காந்தி போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இதன்மூலம், பிரியங்கா காந்தி முதல்முறையாக கேரளாவில் இருந்து தனது அரசியல் பயணத்தை தொடங்குகிறார்.

இந்நிலையில், கடந்த 5 ஆண்டுகளாக வயநாடு மக்கள் எனக்கு கொடுத்த ஆதரவு, அன்பு என்றும் மறக்க முடியாது என வயநாடு மக்களுக்கு ராகுல் காந்தி நன்றி தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News