இந்தியா

புனே விமான நிலையம் இனி 'துக்காராம் மகாராஜ் விமான நிலையம்'.. பெயரை மாற்றிய மகாராஷ்டிர அரசு

Published On 2024-09-23 16:00 GMT   |   Update On 2024-09-23 16:01 GMT
  • அமைச்சரவைக் கூட்டத்தில் இது தொடர்பாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஒப்புதல் வழங்கப்பட்டிள்ளது
  • நவம்பர் மாதம் சட்டமன்றத் தேர்தல் வர உள்ள நிலையில் இந்த பெயர் மாற்றம் பாஜக கூட்டணி அரசின் முக்கிய நகர்வாகப் பார்க்கப்படுகிறது.

மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள புனே சர்வதேச விமான நிலையத்தின் பெயரை ஜகத்குரு சந்த்ஸ்ரேஸ்தா துக்காராம் மகாராஜ் புனே சர்வதேச விமான நிலையம் என மாற்ற அம்மாநில பாஜக கூட்டணி அரசு முடிவு செய்துள்ளது. இன்று நடைபெற்ற மராட்டிய அரசின் அமைச்சரவைக் கூட்டத்தில் இது தொடர்பாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

மராட்டிய வரலாற்றில், 17-வது நூற்றாண்டைச் சேர்ந்த இந்துமத துறவியான துக்காராம் பக்தி கவிதைகள் மற்றும் மற்றும் கீர்த்தனைகள் எனப்படும் பக்தி பாடல்களால் நன்கு அறியப்படுபவர் ஆவார்.

எனவே புனே விமான நிலையத்துக்கு அவரது பெயரைச் சூட்டி கவுரவிக்க மராட்டிய அரசு முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. மகாராஷ்டிராவில் வரும் நவம்பர் மாதம் சட்டமன்றத் தேர்தல் வர உள்ள நிலையில் இந்த பெயர் மாற்றம் பாஜக கூட்டணி அரசின் முக்கிய நகர்வாகப் பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News