பாராளுமன்ற தகவல் தொடர்பு கமிட்டி உறுப்பினராக கங்கனா ரனாவத் நியமனம்
- தகவல் தொடர்பு மற்றும் தொழில்நுட்ப கமிட்டியின் தலைவராக பா.ஜ.க. எம்.பி. நிஷிகாந்த் துபே நியமிக்கப்பட்டுள்ளார்.
- இந்த குழுவின் உறுப்பினராக நடிகையும், பா.ஜ.க. எம்.பி.யுமான கங்கனா ரனாவத் நியமிக்கப்பட்டள்ளார்.
பாராளுமன்றத்தின் பல்வேறு துறைகளுக்கான நிலைக்குழு மாற்றியமைக்கப்பட்டன. குறிப்பாக முக்கியமான 24 கமிட்டிகள் மாற்றியமைக்கப்பட்டன. மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தி பாதுகாப்பு விவகார கமிட்டியின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த கமிட்டியின் தலைவர் பா.ஜ.க. உறுப்பினர் ராதா மோகன் சிங் ஆவார்.
தகவல் தொடர்பு மற்றும் தொழில்நுட்ப கமிட்டியின் தலைவராக பா.ஜ.க. எம்.பி. நிஷிகாந்த் துபே நியமிக்கப்பட்டுள்ளார். இந்த குழுவின் உறுப்பினராக நடிகையும், பா.ஜ.க. எம்.பி.யுமான கங்கனா ரனாவத் நியமிக்கப்பட்டள்ளார்.
பெண்கள், கல்வி, இளைஞர்கள் மற்றும் விளயைாட்டு விவகாரங்களுக்கான கமிட்டியின் தலைவராக காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் நியமிக்கப்பட்டுள்ளார். சமாஜ்வாடி கட்சி தலைவர் ராம் கோபால் யாதவ் சுகாதார விவகார கமிட்டியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
வெளியுறவு விவகார கமிட்டியின் தலைவராக காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் நியமிக்கப்பட்டுள்ளார். நிலகக்கரி, சுருங்கம் மற்றும் ஸ்டீல் விவகார கமிட்டியின் தலைவராக அனுராக் தாகூர் நியமிக்கப்பட்டுள்ளார்.
சோனியா காந்தி எந்த கமிட்டியின் தலைவராகவும், உறுப்பினராகவும் நியமிக்கப்படவில்லை.
பா.ஜ.க.-வின் கூட்டணி கட்சிகளான தெலுங்கு தேசம், ஜனதா தளம், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளை சேர்ந்தவர்கள் முக்கியமான கமிட்டியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளனர்.