இந்தியா

அக்னிபாத் விவகாரம்- தவறான தகவல்களை தருகிறார் ராகுல் காந்தி

Published On 2024-07-29 13:02 GMT   |   Update On 2024-07-30 06:31 GMT
  • அக்னிவீர் விவகாரத்தில் நாட்டை தவறாக வழி நடத்த முயற்சி நடக்கிறது.
  • நீங்கள் எப்போது அனுமதி அளித்தாலும், அறிக்கை தர தயாராக இருக்கிறேன்.

பட்ஜெட் மீதான விவாத்தின் மீது மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி இன்று உரையாற்றினார். அப்போது பட்ஜெட் குறித்து பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தார்.

அக்னிபாத் திட்டத்தை தொடர்ந்து எதிர்த்து வரும் ராகுல் காந்தி, அக்னிபாத் திட்டம் மூலம் ராணுவத்தில் சேர்ந்த அக்னிவீர் (வீரர்) வீரமரணம் அடைந்தார். அவரது குடும்பத்தினருக்கு 1 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டது என ராஜ்நாத் நாத் அவையில் தெரிவித்தார். ஆனால், அது இன்சூரன்ஸ் மூலமாக வழங்கப்பட்ட தொகை. இழப்பீடாக வழங்கப்பட்டது அல்ல என ராகுல் காந்தி தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் அக்னிபாத் விவகாரத்தில் நாட்டை தவறாக வழி நடத்த முயற்சிப்பதாக ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் கூறியதாவது:-

மத்திய பட்ஜெட் குறித்து எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தி தவறான தகவல்களை பரப்ப முயற்சிக்கிறார். இது தொடர்பாக விவாதத்தின்போது நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தகுந்த பதில் அளிப்பார்.

நம்முடைய வீரர்கள் நாட்டின் எல்லைகளை பாதுகாத்து வருகிறார்கள். இது நம்முடைய தேசிய பாதுகாப்பு குறித்த உணர்வுப்பூர்வமான பிரச்சனை. அக்னிவீர் விவகாரத்தில் தவறான தகவல்களை பரப்ப முயற்சி நடக்கிறது. நீங்கள் எப்போது அனுமதி அளித்தாலும், அறிக்கை தர தயாராக இருக்கிறேன்.

இவ்வாறு ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News