இந்தியா

பிரதமர் பதவிக்கு எனது தேர்வு ராகுல் காந்தி தான்- கார்கே ஓபன் டாக்

Published On 2024-05-31 12:22 GMT   |   Update On 2024-05-31 12:22 GMT
  • பிரியங்கா காந்தி போட்டியிட வேண்டும் என்று நான் விரும்பினேன்.
  • ராகுல் காந்தி இளைஞர்களையும், நாட்டையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.

பாராளுமன்ற தேர்தலில் பாஜகவை தோற்கடித்தால், நரேந்திர மோடிக்குப் பிறகு ராகுல் காந்தி தான் நாட்டின் பிரதமராக பதவியேற்பார் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.

மேலும் அவர்," தேர்தலுக்கு முன் இரண்டு 'பாரத் நீதி யாத்திரையை வழிநடத்தியவர் ராகுல் காந்தி. யாத்திரையின்போது விரிவான பிரச்சாரம் செய்தவர். பிரதமர் மோடியை நேரடியாகத் தாக்கியவர் ராகுல் காந்தி. அவரே உயர் பதவிக்கான பொறுத்தமான தேர்வு.

ராகுல் காந்தி பிரதமராக வேண்டும் என்பது எனது விருப்பம். அவர் இளைஞர்களையும், நாட்டையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.

பலரால் உயர் பதவிக்கான யதார்த்தமான ஒருமித்த வேட்பாளராக ராகுல் காந்தி பார்க்கப்படுகிறார்" என்றார்.

இதேபோல், " பிரியங்கா காந்தி தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று நான் விரும்பினேன். ஆனால் ராகுலுக்கு தனது பிரச்சார மேலாளராக ஒருவர் தேவைப்பட்டார். அதனால் அவர் நாடு முழுவதும் பிரச்சாரம் செய்தார்" என்றார்.

Tags:    

Similar News