இந்தியா

ராகுல் காந்தி

நாட்டிலேயே ஊழல் மிகுந்த அரசாக கர்நாடகா திகழ்கிறது - ராகுல் காந்தி

Published On 2022-10-10 16:25 GMT   |   Update On 2022-10-10 16:25 GMT
  • காங்கிரஸ் எம்.பி.யான ராகுல் காந்தி தற்போது கர்நாடகாவில் இந்திய ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டு வருகிறார்.
  • அப்போது பேசிய அவர், எதையெல்லாம் விற்க முடியுமோ அனைத்தையும் பா.ஜ.க.வினர் விற்கின்றனர் என்றார்.

பெங்களூரு:

காங்கிரஸ் எம்.பி.யான ராகுல் காந்தி தற்போது கர்நாடகாவில் இந்திய ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டு வருகிறார்.

கர்நாடகாவின் ஹிரியூர் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற ராகுல் காந்தி, கர்நாடகாவில் ஆளும் பா.ஜ.க. அரசை கடுமையாக சாடினார். அப்போது அவர் கூறியதாவது:

நாட்டிலேயே ஊழல் மிகுந்த மாநில அரசாக கர்நாடக அரசுதான் உள்ளது. ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் 40 சதவீத கமிஷன்களை அவர்கள் பெறுகின்றனர். 1,300 தனியார் பள்ளிகளிடம் 40 சதவீத கமிஷன்கள் பெறப்பட்டுள்ளது.

நான் சொன்னதாக எடுத்துக்கொள்ள வேண்டாம். பா.ஜ.க. எம்.எல்.ஏவே இந்தக் கருத்தை கூறியிருக்கிறார். முதல் மந்திரி பதவி 2,500 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டதாக பாஜக எம்.எல்.ஏவே ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கிறார். ரூ.80 லட்சத்திற்கு போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பதவி விற்பனை செய்யப்பட்டுள்ளது. கல்லூரி உதவி பேராசிரியர்களின் பணி விற்பனை செய்யப்படுகிறது.

எதையெல்லாம் விற்க முடியுமோ அனைத்தையும் பாஜகவினர் விற்கின்றனர் என தெரிவித்தார்.

Tags:    

Similar News