இந்தியா

ராகுல் காந்தி பிரதமராகியிருப்பார்... சில மாநிலங்கள் இதை செய்திருந்தால்... கார்கே

Published On 2024-08-23 07:35 GMT   |   Update On 2024-08-23 07:35 GMT
  • சில மாநிலங்கள் தலா ஐந்து இடங்கள் என மொத்தம் 25 இடங்கள் தந்திருந்தால்....
  • நாம் கடினமாக உழைக்க வேண்டும். வெற்றி முக்கியமானது. வெறும் வார்த்தைகளால் மட்டும் வெற்றி சாதனையை பெற முடியாது.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் 90 இடங்களுக்கு மூன்று கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி கடும் நெருக்கடி கொடுத்தது. இதனால் பாஜக-வால் தனி மெஜாரிட்டி கிடைக்காமல் போனது.

காங்கிரஸ் கட்சி 99 இடங்களில் வெற்றி பெற்றது. இந்தியா கூட்டணி 240 இடங்களில் வெற்றி பெற்றது. 32 இடங்களில் கூடுதலாக வெற்றி பெற்றிருந்தால் இந்தியா கூட்டணி ஆட்சியை பிடித்திருக்கும்.

இந்த நிலையில்தான் ஜம்மு-காஷ்மீர், அரியானா மாநிலத்தில் விரைவில் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலிலும் வெற்றியை பெற இந்தியா கூட்டணி கடுமையாக உழைக்க தீர்மானித்துள்ளது.

காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்கார்ஜூன கார்கே, கட்சி தொண்டர்களிடையே பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

மக்களவை தேர்தில் நாம் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாமல் இருந்திருக்கலாம். ஆனால், இந்தியா கூட்டணி பல இடங்களில் வெற்றி பெற்றது. ஜம்மு-காஷ்மீர், மத்திய பிரதேசம், இமாச்சல பிரதேசம் மற்றும் மற்ற சில மாநிலங்கள் தலா ஐந்து இடங்கள் என மொத்தம் 25 இடங்கள் தந்திருந்தால் ராகுல் காந்தி பிரதமராகியிருப்பார்.

இதற்காகத்தான் நாம் கடினமாக உழைக்க வேண்டும். வெற்றி முக்கியமானது. வெறும் வார்த்தைகளால் மட்டும் வெற்றி சாதனையை பெற முடியாது. களப்பணியை செய்வதை தவிர்த்து நாம் பேசிக் கொண்டிருந்தால் அது நிறைவேறாது. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து மீட்டெடுப்பதற்கு வெற்றி முக்கியமானது. வெற்றி பெற்றால் மீண்டும் மாநில அந்தஸ்து கிடைக்கும். வெற்றி பெற்றால் சட்ட மன்றம் திரும்பும். வெற்றி பெற்றால் மாவட்டம், ஊராட்சி, பேரூராட்சிகளுக்கு தேர்தல் நடத்தப்படும்

இவ்வாறு கார்கே தெரிவித்தார்.

Tags:    

Similar News