இந்தியா

மாநிலங்களவை இடைத்தேர்தல்: பா.ஜனதாவின் தினேஷ் சர்மா போட்டியின்றி தேர்வு

Published On 2023-09-05 15:03 GMT   |   Update On 2023-09-05 15:03 GMT
  • தினேஷ் சர்மாவை தவிர வேறுயாரும் வேட்புமனு தாக்கல் செய்யப்படவில்லை
  • முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் முன்னிலையில் வேட்புமனு தாக்கல் செய்தார்

உத்தர பிரதேச மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஹர்த்வார் துபே. இவரது பதவிக் காலம் 2026 வரை இருந்த நிலையில், காலமானார். இதனால் செப்டம்பர் 15-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

பா.ஜனதா சார்பில் தினேஷ் சர்மா வேட்பாளர் அறிவிக்கப்பட்டார். அவருக்கு எதிராக எந்தக்கட்சியின் வேட்பாளரை நிறுத்தவில்லை. இதனால் தினேஷ் சர்மா போட்டியின்றி வெற்றி பெற்றார்.

தினேஷ் சர்மா அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், துணை முதல்வர் பிரஜேஷ் பதாக், கேஷவ் பிரசாத் மயூரா உள்ளிட்டோர் முன்னிலையில் வேட்புமனு தாக்கல் செய்தார்.

வெற்றி பெற்ற தினேஷ் சர்மா பிரதமர் மோடி, முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் கட்சியின் மூத்த தலைவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

2017 முதல் 2022 வரை யோகி ஆதித்யநாத் ஆட்சியில் துணை முதல்வராக பதவி வகித்தவர் தினேஷ் சர்மா.

Tags:    

Similar News