தற்போது கெஜ்ரிவால்: மேலும் பலர் குறிவைக்கப்படலாம்- பா.ஜனதா மீது கபில் சிபல் விமர்சனம்
- சத்தீஸ்கர், தெலுங்கானா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் டார்கெட் செய்யப்பட்டது
- மக்களவை தேர்தல் வர இருப்பதால் இன்னும் அதிகமானோர் மீது குறி வைக்கப்பட்டலாம்
ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவரும், டெல்லியின் முன்னாள் துணை முதல்வருமான மணீஷ் சிசோடியாவுக்கு டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்க மறுத்துவிட்டது. அதனைத் தொடர்ந்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு கைது செய்யப்படலாம் என கருதப்படுகிறது. இந்த நிலையில் மாநிலங்களவை எம்.பி. கபில் சிபல் பா.ஜனதா அரசை விமர்சனம் செய்துள்ளார்.
இதுகுறித்து மாநிலங்களவை எம்.பி. கபில் சிபல் கூறியதாவது:-
அவர்கள் (பா.ஜனதா) தற்போது அரவிந்த் கெஜ்ரிவாலை குறிவைத்துள்ளனர். மக்களவை தேர்தல் விரைவில் வரவிருக்கிறது. அவர்கள் இன்னும் பலர் மீது குறிவைப்பார்கள். ஒரு குறிப்பிட்ட நிலையில், ஆம் ஆத்மி எம்.பி. ராகவ் சதாவை டார்கெட் செய்வார்கள் என்ற அச்சம் உள்ளது.
அவர்கள் சிபுசோரனை டார்கெட் செய்தார்கள். சிபுசோரன் மற்றும் 30 முதல் 40 அதிகாரிகளை சத்தீஸ்கரில் டார்கெட் செய்தார்கள். மகாராஷ்டிரா மாநிலத்தில் என்ன செய்தார்கள் என்பது உங்களுக்கு தெரியும். மத்திய பிரதேசம், தெலுங்கானாவில் அவர்கள் செய்ததையும் பார்த்து இருப்பீர்கள்.
ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவை ஜெயிலில் அடைத்தார்கள். மேற்கு வங்காளத்தில் அபிஷேக் பானர்ஜி டார்கெட் செய்யப்பட்டுள்ளார். பண மோசடி தடுப்புச் சட்டத்தை தவறாக பயன்படுத்துவது தொடர்பாக நீதிமன்றங்கள் ஏன் விழித்துக் கொள்ளவில்லை?
இவ்வாறு தெரிவித்துள்ளார்.