மங்களகரமான நாளில் தீர்ப்பு...! நீதிபதியை வேதனைப்பட செய்த வழக்கு
- சகோதரிகளை பாதுகாக்கும் உறுதி மொழி எடுக்கும் விழாவாக ரக்ஷா பந்தன் கொண்டாடப்படுகிறது
- சகோதரரர்கள் கை மணிக்கட்டில் சகோதரிகள் ராக்கி கயிறு கட்டுவார்கள்
இந்தியாவில் நேற்று ரக்ஷா பந்தன் விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக சகோதரர் மற்றும் சகோதரராக நினைக்கும் ஆண்கள் கைகளின் மணிக்கட்டில் பெண்கள், சிறுமிகள், மாணவிகள் ராக்கி கயிறு கட்டுவதாகும். இவ்வாறு கட்டிவிடும் பெண்களுக்கு சசோதரர்கள் பரிசு வழங்குவது வழக்கம்.
இது வெறும் கயிறு கட்டுதல், பரிசு வழங்கும் சம்பிரதாயம் இல்லை. அந்த பெண், சகோதரர் தனது வாழ்க்கைக்கு துணையாகவும், கடைசி மூச்சு வரை வளர்ப்பதாகவும் எண்ணுவார். ஆண்களும் இதுபோன்று கருத வேண்டும் என்பதுதான்.
ஆனால், ஒடிசா உயர்நீதிமன்றத்தில் ரக்ஷா பந்தன் தினத்தன்று சகோதரரால் கற்பழிக்கப்பட்டு, கர்ப்பம் அடைந்த சகோதரி குறித்த வழக்கு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை நீதிபதி எஸ்.கே. சாஹூ விசாரணை நடத்தி தீர்ப்பு வழங்கும் நிலை ஏற்பட்டது.
மேல்முறையீட்டான இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவருக்கு 20 ஆண்டுகள் தண்டனையுடன், 40 ஆயிரம் ரூபாய் அபாரம் விதித்தும் நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.
இதுகுறித்து நீதிபதி தனது கருத்தில் ''சகோதரிக்கு சகோதரன் வாழ்நாள் முழுவதும் பாதுகாப்பாகவும், கடைசி மூச்சு வரை உன்னை வளர்ப்பேன் என்றும் உறுதிகொள்ளும் மங்களரமான நாள் அன்னு இதுபோன்ற முரண்பாடான வழக்கை கேட்பதும், அதற்கு தீர்ப்பு வழங்குவதும் அதிர்ச்சியாக இருக்கிறது" என்றார்.
மல்காங்கிரி சிறப்பு நீதிமன்றத்தில், கடந்த 2018 முதல் 2019 வரை தங்கையை தொடர்ந்து கற்பழித்ததாகவும், அதன்விளைவாக அந்த சிறுமி தனது 14 வயதில் கர்ப்பமானதாகவும் குற்றம்சாட்டப்பட்டு தண்டனை வழங்கப்பட்டது.