இந்தியா
LIVE

கடவுள் ராமர் தேசத்தை இணைக்கிறார்: பிரதமர் மோடி பேச்சு... லைவ் அப்டேட்ஸ்

Published On 2024-01-22 02:34 GMT   |   Update On 2024-01-22 09:34 GMT
  • 380 அடி நீளம், 250 அடி அகலத்தில் ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. 161 அடி உயரம் கொண்டது.
  • 392 தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன. 44 கதவுகள் உள்ளன.

கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்ள 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது.

2024-01-22 09:34 GMT

அயோத்தி ராமர் கோவிலுக்குள் சென்ற சாதுக்கள்....

2024-01-22 09:24 GMT

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்ட முக்கிய பிரமுகர்களை சந்தித்தார் பிரதமர் மோடி

2024-01-22 08:52 GMT

பிரதமர் மோடி பேச்சு

இந்த நன்னாளில் நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகள். பல ஆண்டு காத்திருப்புக்கு பிறகு இன்று ராமர் வந்துவிட்டார். பகவான் ராமரின் ஆசிர்வாதம் நம் அனைவருக்கும் உள்ளது. இன்றைய நாள் வரலாற்று சிறப்புமிக்க தருணம் மட்டுமல்ல, புதிய காலச்சக்கரத்தின் துவக்கம்.

2024-01-22 08:46 GMT

மோகன் பகவத் பேச்சு

இன்றைய நாள் புதிய இந்தியாவின் வளர்ச்சியை குறிக்கிறது. நாட்டில் ராமராஜ்ஜியம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இந்த தருணத்தில் நாம் அனைவரும் கருத்து வேறுபாடுகளை புறம் தள்ள வேண்டும் என மோகன் பகவத் கூறினார்.

2024-01-22 08:22 GMT

இன்று அனைவருடைய மனங்களிலும் ராம நாமமே ஒலிக்கிறது... யோகி ஆதித்யநாத் பேச்சு

2024-01-22 08:15 GMT

11 நாள் விரதத்தை நிறைவு செய்தார் பிரதமர் மோடி

2024-01-22 08:06 GMT

பிரதமர் மோடிக்கு உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் அயோத்தி ராமர் கோவிலின் மாதிரியை வழங்கினார்.

2024-01-22 08:04 GMT

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் உரையாற்ற இருக்கிறார் பிரதமர் மோடி


2024-01-22 08:00 GMT

அயோத்தி ராமர் கோவிலின் கருவறையில் இருந்து வெளியே வந்த பிரதமர் மோடி

2024-01-22 07:59 GMT

ராமர் கோவில் வளாகத்தை சுற்றிப்பார்த்தார் பிரதமர் மோடி...

Tags:    

Similar News