இந்தியா

அடுத்த சர்ச்சையில் அயோத்தி ராமர் கோவில்.. ரூ.50 லட்சம் மதிப்புள்ள 4000 விளக்குகள் திருட்டு!

Published On 2024-08-14 05:18 GMT   |   Update On 2024-08-14 05:19 GMT
  • 6 ஆயிரத்து 400 வண்ண விளக்குகளும், 96 லேசர் விளக்குகளும் அமைக்கப்பட்டுள்ளன.
  • இந்த விளக்குகளில் மதிப்பு சுமார் 1 கோடி ரூபாய் ஆகும்.

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் விஷ்வ இந்து பரிஷத் உள்ளிட்ட இந்து அமைப்பினரால் பாபர் மசூதி இடிக்கப்பட்ட பகுதியில் மத்திய பாஜக அரசால் ரூ.18,00 கோடி பொருட்செலவில் புதிதாக கட்டப்பட்ட ராமர் கோவில் உள்ளது. கட்டுமானப் பணிகள் மீதமிருந்த நிலையில் கடந்த கடந்த ஜனவரி 22 ஆம் தேதி அவசர சைவசரமாக கோவிலின் மூல விக்ரகமான பால ராமர் சிலை பிரதிஷ்டை விழா பிரமாண்டமான முறையில் நடத்தி முடிக்கப்பட்டது. இது மக்களவைத் தேர்தளுக்காக பாஜக நடத்திய நாடகமென எதிரிக்கட்சிகள் குற்றம்சாட்டின.

அனைத்தையும் மீறி ராமர் கோவிலில் வழிபாடு செய்ய பக்தர்கள் அதிக அளவில் வந்துகொண்டிருந்த நிலையில் சமீப காலமாக அங்கு நடந்துவரும் சம்பவங்கள் கோவிலை பொலிவிழக்கச் செய்வதாக அமைந்துள்ளது. கடந்த மாதங்களில் சிறிய மழைக்கு கூட தாக்குப் பிடிக்க முடியாதபடி கோவிலின் மேற்கூரை ஒழுகும் புகைப்படங்கள் வைரலாகின.

கோவிலின் மூத்த அர்ச்சகரும் இதுகுறித்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். தொடர்ந்து கோவின் பிரதான பாதையாக அமைக்கப்பட்ட ராம பாதை மழையால் சேதமடைந்த வீடியோக்களும் இணையத்தில் கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகின.ஊழல் செய்யவே பாஜக ராமர் கோவிலை கட்டியுள்ளதாக எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்தன. இந்நிலையில் அடுத்த சர்ச்சையாக அயோத்தி கோவிலுக்கு செல்லும் வழியில் அமைக்கப்பட்டிருந்த வண்ண விளக்குகளில் 3 ஆயிரத்து 800 விளக்குகள் திருடப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 36 லேசர் விளக்குகளும் திருடப்பட்டுள்ளன.

 

அயோத்தி ராமர் கோவில் செல்லும் வழியில் ஆயிரக்கணக்கான வண்ண விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. 6 ஆயிரத்து 400 வண்ண விளக்குகளும், 96 லேசர் விளக்குகளும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த விளக்குகள் பராமரிப்பைத் தனியார் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இந்த விளக்குகளில் மதிப்பு சுமார் 1 கோடி ரூபாய் ஆகும்.

 

கடந்த மார்ச் 19ம் தேதி கணக்கெடுப்பின்போது அனைத்து விளக்குகளும் இருந்த நிலையில் அதன்பின் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் பாதிக்கும் மேற்பட்ட விளக்குகள் திருடப்பட்டது தெரியவந்துள்ளது. திருடப்பட்ட வண்ண விளக்குகளின் மதிப்பு சுமார் 50 லட்ச ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திருட்டு சம்பவம் தொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News