இந்தியா

சைபர் தாக்குதல்: 300 வங்கி சேவைகள் முடங்கியது

Published On 2024-08-01 03:01 GMT   |   Update On 2024-08-01 03:01 GMT
  • சி-எட்ஜ் சார்பில் எந்த தகவலும் வழங்கப்படவில்லை.
  • வாடிக்கையாளர்களால் பேமண்ட் சிஸ்டம்களை பயன்படுத்த முடியாது.

தொழில்நுட்ப சேவை வழங்கி வரும் நிறுவனம் மீது தொடுக்கப்பட்ட சைபர் தாக்குதல் காரணமாக இந்தியாவில் செயல்பட்டு வரும் கிட்டத்தட்ட 300 சிறு வங்கிகளின் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

நாடு முழுக்க சிறு வங்கிகளுக்கு தொழில்நுட்ப சேவைகளை வழங்கி வரும் சி-எட்ஜ் டெக்னாலஜீஸ் நிறுவனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக சி-எட்ஜ் சார்பில் எந்த தகவலும் வழங்கப்படவில்லை.

இது குறித்து ரிசர்வ் வங்கி சார்பிலும் எந்த தகவலும் வழங்கப்படவில்லை. எனினும், பேமண்ட் சேவைகளை நிர்வகித்து வரும் தேசிய பேமண்ட் கார்ப்பரேஷன் நிறுவனம், ரீடெயில் பேமண்ட்களை செய்வதில் இருந்து சி எட்ஜ் டெக்னாலஜீஸ் தற்காலிகமாக ஒதுக்கி வைக்கப்படுவதாக தெரிவித்தது.

இந்த காலக்கட்டத்தில் சி-எட்ஜ் சேவை வழங்கும் வங்கிகளை பயன்படுத்தி வரும் வாடிக்கையாளர்களால் பேமண்ட் சிஸ்டம்களை பயன்படுத்த முடியாது. இதன் காரணமாக நாடு முழுக்க சுமார் 300 வங்கிகள் பேமண்ட் நெட்வொர்க்கில் இருந்து தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறது.

தாக்குதல் பரவாமல் இருப்பதை உறுதிப்படுத்தும் பணிகளில் தேசிய பேமண்ட் கார்ப்பரேஷன் ஈடுபட்டுள்ளது. 

Tags:    

Similar News