"துக்கம்" அன்புக்கு கொடுக்க வேண்டிய விலை: ரத்தன் டாடாவின் உதவியாளர் சாந்தனு நாயுடுவின் இரங்கல் செய்தி
- சாந்தனு நாயுடு ரத்தன் டாடா அலுவலகத்தின் பொது மேலாளர் ஆவார்.
- விலங்குகள் மீதான் அன்பின் மூலம் ரத்தன் டாடாவை 2014-ல் சந்தித்தார் சாந்தனு நாயுடு.
டாடா குழுமத்தின் மரியாதைக்குரிய தலைவரான ரத்தன் டாடா நேற்றிரவு காலமானார். அவரது மறைவுக்கு இந்திய குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். முகேஷ் அம்பானி, அதானி உள்ளிட்ட தொழில் அதிபர்கள் தங்களது துக்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
இந்த நிலையில் ரத்தன் டாடாவின் உதவியாளரான ஷாந்தனு நாயுடு தனது இரங்கல் செய்தியை பகிர்ந்துள்ளார். அவர் தனது இரங்கல் செய்தியில் "இந்த நட்பு இப்போது என்னுடன் விட்டுச்சென்ற வெற்றிடத்தை, என் வாழ்நாள் முழுவதும் நிரப்ப முயற்சிப்பேன். துக்கம் என்பது அன்புக்குக் கொடுக்க வேண்டிய விலை. குட்பை, மைடியர் கலங்கரை விளக்கம்" என 30 வயதாக ரத்தன் டாடாவின் அலுவலக பொது மேலாளர் சாந்தனு நாயுடு இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். மேலும், அவருடன் இணைந்து எடுத்த போட்டோவை வெளியிட்டுள்ளார்.
ரத்தன் டாடா உடனான சாந்தனு நாயுடுவின் சாத்தியமில்லாத நட்பு விலங்குகள் மீதான அவர்களின் அன்பின் மூலம் மலர்ந்தது.
இருவரும் 2014-ல் சந்தித்தனர். நாயுடு இரவில் தெரு நாய்கள் கார்களால் தாக்கப்படாமல் பாதுகாக்க ரிஃப்ளெக்டிவ் காலர்களை உருவாக்கினார். அவரது முயற்சியால் ஈர்க்கப்பட்ட டாடா சன்ஸ் தலைவர் ரத்தன் டாடா சாந்தனு நாயுடுவை தன்னிடம் பணியாற்ற அழைத்தார்.