அக்னிபாத் திட்டத்தின் கீழ் பாதுகாப்பு படையில் சேர்ந்த பாஜக எம்.பியின் மகள்- குவியும் பாராட்டு
- அக்னிபாத் திட்டம் கடந்த ஆண்டு ஜூன் 14ம் தேதி அன்று மத்திய அரசால் தொடங்கப்பட்டது.
- ரவி கிஷன் தனது மகள் குறித்த செய்திகளை ட்விட்டரில் பதிவிட்டு வருபவர்களுக்கு நன்றி தெரிவித்து வருகிறார்.
பாஜக எம்.பி ரவி கிஷானின் மகள் இஷிதா சுக்லா (21). இவர் மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்தின் கீழ் பாதுகாப்பு படையில் சேர்ந்துள்ளார். பிரபலத்தின் மகளாக இருந்தாலும் வித்தியாசமான வாழ்க்கைப் பாதையைத் தேர்ந்தெடுத்ததற்காக எம்.பி ரவி கிஷானுக்கும், அவரது மகள் இஷிதா சுக்லாவிற்கும் சமூக வலைத்தளத்தில் பாராட்டுகள் குவிந்து வருகிறது.
அக்னிபாத் திட்டம் கடந்த ஆண்டு ஜூன் 14ம் தேதி அன்று மத்திய அரசால் தொடங்கப்பட்டது. அறிமுகம் செய்யப்பட்ட ஆரம்ப காலத்தில் எதிர்ப்புகள் கிளம்பியது. இதற்கிடையே, ஜூன் 16ம் தேதி அன்று, அக்னிபாத் திட்டத்தின் மூலம் ஆட்சேர்ப்பு செய்வதற்கான வயது வரம்பை 21 ஆண்டுகளில் இருந்து 23 ஆண்டுகளாக மத்திய அரசு நீட்டித்தது.
இந்த திட்டத்திற்கு எதிர்ப்புகள் இருந்தாலும், ஏராளமான இளைஞர்கள் அக்னிபாத் திட்டத்தின் கீழ் இணைந்து வருகின்றனர். இந்நிலையில், பாஜக எம்.பி ரவி கிஷானின் மகள் இஷிதா சுக்லாவும் அக்னிபாத் திட்டத்தின் கீழ் பாதுகாப்பு படையில் சேர்ந்துள்ளார்.
ரவி கிஷான் தனது மகள் குறித்த செய்திகளை ட்விட்டரில் பதிவிட்டு வருபவர்களுக்கு நன்றி தெரிவித்து வருகிறார்.
இந்த மாத தொடக்கத்தில், ஜம்மு மற்றும் காஷ்மீர் லைட் காலாட்படையின் (JAKLI) முதல் பிரிவு அக்னிவீரர்களுக்கு ஸ்ரீநகரில் நடந்த விழாவில் சான்றளிக்கப்பட்டது.