இந்தியா

ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை: ரிசர்வ் வங்கி கவர்னர் அறிவிப்பு

Published On 2024-02-08 10:23 GMT   |   Update On 2024-02-08 10:23 GMT
  • ரெப்போ வட்டி விகிதம் 6.5 ஆக தொடர்ந்து நீடிக்கும்.
  • 2024-ம் ஆண்டு உலகளாவிய வளர்ச்சி நிலையானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை கூட்டம் இன்று மும்பையில் நடந்தது. பின்னர் கவர்னர் சக்தி காந்த தாஸ் நிருபர்களிடம் கூறியதாவது:-

வங்கிகளுக்கு வழங்கப்படும் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதத்தில் எந்தவித மாற்றமும் இல்லை. ரெப்போ வட்டி விகிதம் 6.5 ஆக தொடர்ந்து நீடிக்கும். நாட்டின் பண வீக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யப்படவில்லை. வர்த்தகம் பலவீனமாக இருந்தாலும் அது மீட்சிக்கான அறிகுறிகளை வெளிப்படுத்துகிறது. பணவீக்கம் இலக்கை நெருங்கி வருகிறது. எதிர்பார்த்ததை விட வளர்ச்சி சிறப்பானதாக இருக்கும். 2024-ம் ஆண்டு உலகளாவிய வளர்ச்சி நிலையானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

ரெப்போ வட்டி விகிதம் 6-வது முறையாக மாற்றம் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக வீடு, வாகனம். மற்றும் தனி நபர் கடன்களுக்கான வட்டி விகிதம் உயர வாய்ப்பு இல்லை.

Tags:    

Similar News