இந்தியா
இணையமைச்சர் பதவியை ஏற்க மறுப்பு: அமைச்சரவையில் இடம்பெறாத அஜித் பவார் கட்சி
- இணையமைச்சர் பதவியை ஏற்க முடியாது என்பதை பாஜக தலைமைக்கு தெரிவித்துவிட்டேன்
- மோடி அமைச்சரவையில் அஜித் பவார் கட்சி இடம்பெறவில்லை
மகாராஷ்டிராவில் உள்ள 48 தொகுதிகளில் பாஜக 17 இடங்களில் மட்டும் தான் வென்றது. அதில் 1 இடத்தில் மட்டும் தான் அஜித் பவார் கட்சி வென்றது. அக்கட்சியின் பிரஃபுல் படேல் எம்.பி.யாக தேர்வானார்.
இந்நிலையில், மத்திய அமைச்சரவையில் பிரஃபுல் படேலுக்கு வழங்கப்பட்ட இணையமைச்சர் பதவியை ஏற்க அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி மறுப்பு தெரிவித்துள்ளது. அதனால் மோடி அமைச்சரவையில் அஜித் பவார் கட்சி இடம் பெறவில்லை.
இது தொடர்பாக பேசிய மராட்டிய துணை முதல்வர் அஜித் பவார், "பிரஃபுல் படேல் ஏற்கனவே ஒன்றிய அமைச்சராக பதவி வகித்துள்ளார். அப்படி இருக்கும்போது இணையமைச்சர் பதவியை ஏற்பதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. எங்களுக்கு ஒன்றிய அமைச்சர் பதவி வேண்டும் என கேட்டுள்ளோம். அமைச்சர் பதவிக்காக காத்திருக்க தயார் என பாஜக தலைமையிடம் தெரிவித்து உள்ளோம்" என்று கூறியுள்ளார்.