இந்தியா

பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம்: தமிழ்நாட்டை பின்பற்றும் டெல்லி

Published On 2024-03-04 09:55 GMT   |   Update On 2024-03-04 11:04 GMT
  • முக்யமந்திரி மகிளா சம்மன் யோஜனா என பெயரிடப்பட்டுள்ள இத்திட்டத்தில், 18 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் பயனடைவர்.
  • கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் வெற்றியைத் தொடர்ந்து பிற மாநிலங்களும் இதனை செயல்படுத்தி வருகின்றன

டெல்லியில் 18 வயது நிரம்பிய பெண்கள் அனைவருக்கும் மாதம் ₹1,000 உதவித்தொகை வழங்கப்படும் என அம்மாநில பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

2024-25 நிதியாண்டில் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என்றும், இதற்காக பட்ஜெட்டில் 2000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்று சட்டசபையில் டெல்லி நிதியமைச்சர் அதிஷி தெரிவித்துள்ளார்.

முக்யமந்திரி மகிளா சம்மன் யோஜனா என பெயரிடப்பட்டுள்ள இத்திட்டத்தில், 18 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் பயனடைவர்.

அதே சமயம், ஓய்வூதியம் மற்றும் டெல்லி அரசின் வேறு திட்டங்களில் பலனடைபவர்கள், அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துபவர்களுக்கு இத்திட்டத்தின்மூலம் ₹1,000 வழங்கப்படமாட்டாது என்று டெல்லி அரசு தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டின் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் வெற்றியைத் தொடர்ந்து பிற மாநிலங்களும் இதனை செயல்படுத்தி வருகின்றன

Tags:    

Similar News