இந்தியா
பெண்களுக்கு மாதம் ரூ.1500 வழங்கும் திட்டம்: தமிழ்நாட்டை பின்பற்றும் இமாச்சலப்பிரதேசம்
- மகளிருக்கு மாதம் ₹1,500 வழங்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் சுக்விந்தர் சுகு அறிவித்துள்ளார்.
- டெல்லியில் 18 வயது நிரம்பிய பெண்கள் அனைவருக்கும் மாதம் ₹1,000 உதவித்தொகை வழங்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது
இமாச்சலப் பிரதேசத்தில் 18 முதல் 60 வயதுடைய மகளிருக்கு மாதம் ₹1,500 வழங்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் சுக்விந்தர் சுகு அறிவித்துள்ளார்.
கடந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 10 வாக்குறுதிகளில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திரா காந்தி பியாரி பெஹ்னா சுக் சம்மன் நிதி யோஜனா என்ற இத்திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு ₹ 800 கோடி செலவிடப்படும் என்றும், 5 லட்சத்துக்கும் மேற்பட்ட பெண்கள் இதன் கீழ் பயனடைவார்கள் என்று அரசு தெரிவித்துள்ளது.
இன்றைய தினத்தில், டெல்லியில் 18 வயது நிரம்பிய பெண்கள் அனைவருக்கும் மாதம் ₹1,000 உதவித்தொகை வழங்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டின் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் வெற்றியைத் தொடர்ந்து பிற மாநிலங்களும் இதனை செயல்படுத்தி வருகின்றன