இந்தியா

ரூ.34,000 கோடி வங்கி கடன் மோசடி வழக்கு: டி.எச்.எப்.எல். நிறுவன இயக்குநர் தீரஜ் வதாவன் கைது

Published On 2024-05-14 15:56 GMT   |   Update On 2024-05-14 15:56 GMT
  • 17 வங்கிகள் இணைந்து 34,000 கோடி ரூபாய் மோசடி செய்ததாக கூறப்படும் டி.எச்.எப்.எல். வழக்கை சி.பி.ஐ. பதிவு செய்து விசாரித்து வருகிறது.
  • இது நாட்டிலேயே மிகப்பெரிய வங்கி கடன் மோசடியாகும்.

திவான் ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட் (DHFL) நிறுவனத்தின் இயக்குநர் தீரஜ் வதாவன், ₹34,000 கோடி வங்கி கடன் மோசடி வழக்கில் சி.பி.ஐ.யால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

2022 ஆம் ஆண்டு இந்த வழக்கு தொடர்பாக தீரஜ் வதாவன் மீது சி.பி.ஐ. குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.

17 வங்கிகள் இணைந்து 34,000 கோடி ரூபாய் மோசடி செய்ததாக கூறப்படும் டி.எச்.எப்.எல். வழக்கை சி.பி.ஐ. பதிவு செய்து விசாரித்து வருகிறது. இது நாட்டிலேயே மிகப்பெரிய வங்கி கடன் மோசடியாகும்.

ஏற்கனவே யெஸ் வங்கியின் கடன் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளியே இருந்த தீரஜ் வதாவனை மீண்டும் சி.பி.ஐ. கைது செய்துள்ளது.

தீரஜ் வதாவனை நேற்று கைது செய்த சி.பி.ஐ. இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதாகவும் அவருக்கு மே 30 வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News